வெள்ளி, 15 அக்டோபர், 2010

சன் சீ உரிமையாளர் என பெண் ஒருவர் விசாரணை!

இலங்கையில் இருந்து கனடாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற சன் சீ கப்பலின் உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் பெண் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பெண் அகதியாக கனடா சென்றுள்ள நிலையில், குடியுரிமை தொடர்பில் தமது நான்காம் கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவரது அடையளம் உறதிப்படுத்தப்படாத நிலையில், தொடர்ந்தும் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது. குறித்த பெண்ணின் கணவரும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்கப்படுகிறார். அவர் வன்குவார் சீர்திருத்த முகாமில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பெண், விசாரணையின் போது சமர்ப்பித்த பெயருக்கும், அவரது ஆவணங்களில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் காணப்படுகின்ற நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் அவர் கருத்தரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அகதிகள் ஆர்;வலர் ரொன் யமாச்சி, அவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பவ்றில் உள்ள பெயருக்கும், திருமண சான்றிதழில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். தமது கணவரின் விருப்பத்தின் பேரிலேயே தாம் பெயரை மாற்றிக் கொண்டதாக விசாரணைகளில் குறித்தப் பெண் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமிழ் பெண்கள் திருமணத்தின் பின்னர் தது பெயரை கணவன் பெயருடன் இணைத்துக் கொள்வார் என்பதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல