வெள்ளி, 15 அக்டோபர், 2010

அறிந்து கொள்வோம்

o தினந்தோறும் உலகம் முழுவதும் 16 ஆயிரம் கோடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அவற்றுள் 97% தேவையற்றவை.

o இரத்த அணுக்களின் அளவுடைய கிட்டார் கருவியை நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர்.

o உலகம் முழுவதிலும் 100 கோடி கணனிகள் உள்ளன.

o பார்கோட் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் பொருள், பபிள்கம்

o இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் வீடியோக்களில், 20% இசை தொடர்புடையதாக உள்ளன.

o முதன் முறையாக கைத்தொலைபேசி யில் வைரஸ் தொற்றிய ஆண்டு 2004, வரலாற்றில் இடம் பிடித்த அந்த வைரஸின் பெயர் காபிர்ஏ.

o 35 மைல் நீளத்துக்கு தொடர்ந்து கோடு வரையும் அளவுக்கு, பென்சிலில் கிராபைட் உள்ளது. ஒரு பென்சிலில் தொடர்ந்து 45 சொற்களை எழுத முடியும்.

o நம்மால் கண்களை திறந்து வைத்துக் கொண்டு தும்ம முடியாது.

o 1666ம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானியான ஐசக் நியூட்டன் புவியிர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.

o வெந்நீர் சுவையில்லாமல் இருப்பதற்குக் காரணம், நீரைக் கொதிக்க வைக்கும் போது நீருக்குச் சுவையூட்டும் வாயு வெளியேறிவிடுகிறது.

o ஒன்றுக் கொன்று முரண்பட்ட இரு வேறு வாசனைகளை ஒரே நேரத்தில் மூக்கினால் உணரமுடியாது.

o கண்ணீர் ஒரு கிருமி நாசினியாகும்.

o இரத்தத்தின் அடர்த்தி நீரைவிட ஆறு மடங்கு அதிகம்.

o 25 வயதில் இருக்கும் உடல் சுறுசுறுப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் 75 வயதில் இருக்கும்.

o ஆறு வயதுக் குழந்தை ஒரு நாளைக்கு சிரிப்பதில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட பெரியவர்கள் சிரிப்பதில்லை.

o ஆண்களை விட பெண்களே அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.

o 1903ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

o ஒலிபெருக்கியை அமெரிக்கரானரைஸ் கெல்லொக் என்பவர் 1924ம் ஆண்டு கண்டுபிடித்தார்.

o அமெரிக்காவைச் சேர்ந்த ஓவின்ஸ் கோர்மிங் என்பவர் 1938ம் ஆண்டு முதன் முதலில் கண்ணாடி இழை நாரினை கண்டுபிடித்தார்.

o அவுஸ்திரேலியாவில் வாழும் ஒருவகை மண்புழு 10 அடி நீளம் வரை வளரும்.

o அனைத்தும் போலார் கரடிகளும் இடது கைப்பழக்கம் கொண்டவை.

o நன்கு வளர்ச்சியடைந்த ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு, 17 அங்குல நீளம் இருக்கும்.

o மின்னல் தாக்கிய விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது.

o யானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை. ஆனால் 40 ஆயிரம் தசைகள் உள்ளன. இதனால்தான், மிகப் பெரிய பொருட்களை கூட யானையால் தூக்கி எறிய முடிகிறது.

o முதன்முதலில் தபால் முத்திரையை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு இங்கிலாந்து. 1840ம் ஆண்டு பிளாக்பென்னி முத்திரை இங்கிலாந்தில் விநியோகிக்கப்பட்டது.

o உலகின் முதலாவது ஒலிம்பிக் போட்டி கி.மு. 776ல் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது.

o 1914ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ம் திகதியில் தொடங்கி, 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலகப் போர் நடந்தது. இதில் பன்னாட்டளவில் 1 கோடி படை வீரர்களும் 2 கோடி மக்களும் இறந்தனர்.

o இரண்டாம் உலகப் போரின் போது முதன் முதலாக யுத்த களத்தில் விமானம் பயன்படுத்தப்பட்டது. ரெட்பரோன் என்ற விமானத்தை ஜேர்மனி பயன்படுத்தியது.

o 1851ம் ஆண்டு முதன் முதலில் உலகளாவிய கண்காட்சி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் 6 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர்.

o பிரிட்டிஷ் மாலுமியான ஜேம்ஸ் குக், 1776ம் ஆண்டு அவுஸ்திரேலியா கண்டத்தைக் கண்டுபிடித்தார்.

o முதன் முதலாக பெண்கள் உரிமைகள் மாநாடு 1848ம் ஆண்டு நியூயோர்க்கில் நடைபெற்றது.

o ஒரு வயலின் கருவிக்குள் 70 மரத்துண்டுகள் தனித் தனியாக இணைக்கப்பட்டிருக்கும்.

o பண்டைய கால எகிப்தியர்கள் கற்களால் ஆன தலையணையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

o ஆண்டு தோறும் கடலில் கலக்கப்படும் குப்பைகளின் அளவு எவ்வளவு தெரியுமா? கடலில் இருக்கும் மீன்களின் மொத்த எடையை விட 3 மடங்கு அதிகம்.

o பிரிட்டனில் உள்ள கிளவுசெஸ்டயர் விமான நிலைய ஓடுபாதையில், பறவைகளை விரட்டுவதற்கு டீனாடேனர் என்ற உச்ச ஸ்தாயில் பாடும் பாடகியின் பாடலைச் சத்தமாக ஒலிபரப்புகின்றனர்.

o ஆமாம் என்பதற்கு தலையை மேலும், கீழும் அசைப்போம். இல்லை அல்லது வேண்டாம் என்பதற்கு பக்க வாட்டில் அசைப்போம். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அல்பேனியாவில் தலைகீழ். இல்லை என்றால் மேலும், கீழும் அசைக்க வேண்டும். ஆமாம் என்றால் பக்கவாட்டில் அசைக்க வேண்டும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல