வெள்ளி, 15 அக்டோபர், 2010

தயா மாஸ்டர் ‐ ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் சம்பந்தமான விசாரணை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் சம்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி நேற்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்வைத்த விடயங்களைக் கவனத்தில் கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணைகளின் போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் தனிப்பட்ட ரீதியில் ஆஜராகியதுடன் முறைப்பாடு சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விடயங்களை முன்வைத்தனர். சந்தேக நபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெறப்படவுள்ளதாகவும் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெறப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல