வெள்ளி, 15 அக்டோபர், 2010

கலிபோர்னியா அரசு வக்கீலாக கமலாதேவிக்கு ஒபாமா ஆதரவு

க‌ம‌லாவுட‌ன் ஓபாமாவும் பாரியாரும்

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவிக்கு போட்டியிடும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு, அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வக்கீலாக இருப்பவர் கமலாதேவி ஹாரிஸ்(45).

இந்திய தாய்க்கும், ஜமைக்கா நாட்டு தந்தைக்கும் பிறந்தவர் கமலாதேவி. அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், அடுத்த மாதம் நடக்கும் கலிபோர்னியா மாகாண அரசு வக்கீல் தேர்தலில் இவர் போட்டியிடுகிறார். கலிபோர்னியாவில் ஏராளமான வழக்குகளில் வாதாடியவர் கமலாதேவி. திறம்பட செயலாற்றி வரும் கமலா தேவி, அட்டர்னி ஜெனரல் பதவிக்கு போட்டியிடுவதை ஒபாமா ஆதரித்துள்ளார்.

வரும் 2ம் தேதி நடக்கும் இத்தேர்தலில் கமலா தேவியை எதிர்த்து, குடியரசு கட்சியை சேர்ந்த ஸ்டீவ் கூலி என்பவர் போட்டியிடுகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல