வெள்ளி, 15 அக்டோபர், 2010

தலிபான் கொடுமைக்கு தீர்வு (படங்கள் இணைப்பு)

ஆப்கானிஸ்தானில் தலிபான் கணவர் குடும்பத்தால் மூக்கும், காதும் துண்டிக்கப்பட்ட பெண், அமெரிக்காவில் அறுவை சிகிச்சைக்கு பிறகு பழைய உருவத்தைப் பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் காந்தகார் பகுதியைச் சேர்ந்தவர் பீபி அயிஷா(19). அயிஷாவின் தந்தை, தலிபான் பயங்கரவாதியிடம் கடன் பெற்றிருந்தார். கடனை அடைக்க முடியாத காரணத்தால், 12 வயதான அயிஷாவை தலிபான் பயங்கரவாதிக்கு திருமணம் செய்து வைத்தார். புகுந்த வீட்டில் அயிஷா பல்வேறு கொடுமைக்கு ஆளானார். வீட்டுக்குள் சேர்க்காமல், ஒட்டகம் கட்டி வைக்கும் இடத்தில் தினசரி அயிஷா தூங்க வேண்டியிருந்தது. இந்த கொடுமை தாங்க முடியாமல் அயிஷா, வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். பல மாதங்கள் கழித்து அயிஷாவை கண்டுபிடித்த கணவன் வீட்டார், அவரை பஞ்சாயத்து முன் நிறுத்தினர். தலிபான் பயங்கரவாதிகள் நிறைந்த அந்த பஞ்சாயத்தில் அயிஷாவின் மூக்கையும், காதையும் துண்டிக்க உத்தரவிடப்பட்டது.


ஒரு மலைக்கு அழைத்துச் சென்று அயிஷாவை படுக்க வைத்து அவரது கை, கால்களை உறவினர்கள் பிடித்துக் கொள்ள மூக்கையும், காதையும் அறுத்து வீசினார் கணவர். வலி பொறுக்க முடியாமல் மயக்கமடைந்த அயிஷா இறந்து விட்டதாகக் கருதி கணவன் வீட்டார் சென்று விட்டனர். சுயநினைவு திரும்பிய அயிஷா, தன் தாத்தா வீட்டுக்கு சென்று நிலைமையை சொன்னார். அமெரிக்க தொண்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் அயிஷாவை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது. கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை, அயிஷாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கையும், காதையும் உருவாக்கி பொருத்தியுள்ளது. விரைவில் அயிஷாவுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும் டாக்டர்கள் உறுதியளித்துள்ளனர்.


பழையபடி முக அழகை பெற்றுள்ள அயிஷாவின் படம், அமெரிக்க பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வளவு கொடுமைகளை பொறுத்துக் கொண்டு உயிர் பிழைத்துள்ள அயிஷாவுக்கு, கலிபோர்னியா கவர்னர் அர்னால்டு மனைவி மரியா ஷிரிவர், விருது வழங்கி பாராட்டியுள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல