வெள்ளி, 15 அக்டோபர், 2010

9 ஆயிரம் டாலர் செலவில் கேல்எல் டவரில் திருமணம்

உலகில் திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் மேகக்கூட்டங்கள் நடுவே திருமணம் செய்ய ஆசைப்படுவர். அதற்காக அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவிட தயாராக இருப்பர்.

அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்கிறது மலேசியாவின் கேல்.எல்.டவர். உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான கேல் எல் டவர் ஆயிரத்து 99 அடி உயரமுள்ளது. தற்போது இந்த கட்டடம் திருமண தம்பதிகளின் முதல் தேர்வாக உருவெடுத்துள்ளது.

இது குறித்து கட்டடத்தின் உயர் அதிகாரி ஜூரைடா மொகத் கூறியதாவது: கடந்த 2008-ம் ஆண்டில் வெட்டிங் இன் ஸ்கை என்னும் திட்டத்தின் கீழ் 35 ஜோடிகள் இந்த கட்டடத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

இதன் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் திருமண சுற்றுலா மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை இந்த மையத்தில் 7 ஜோடிகள் திருமணம் நடத்தியுள்ளனர். இவர்களுடன் கேஎல் டவர், பெல்நோட்ஸ், தேசிய பதிவுத்துறை ஆகியவை இணைந்து நடத்தியது. திருமணசெலவாக தம்பதி ஒருவருக்கு 8 ஆயிரத்து 69 அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்படுகிறது.

மேலும் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய உள்ள மலேசிய தம்பதிகளுக்கு மேலும் பல சலுகைகள் வழங்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல