புதன், 20 அக்டோபர், 2010

கோத்தாபய இல்லையென்றால் புலிகளை வென்றிருக்க முடியாது - பயங்கரவாத முறியடிப்பு வல்லுநர்!

பலம்வாய்ந்த பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிரான போர்கள்கூட வெற்றிகொள்ளப்படலாம். அது எவ்வாறு என்பற்கு இலங்கை முன்னுதாரணமாகவுள்ளது.

இதுதான் மிக அரிதாக பத்திரிகைகளுக்கு செவ்வி வழங்கும் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ’தி அவுஸ்ரேலியன்’ [Theaustralian] இற்கு வழங்கிய செவ்வியின் சாரமாகும்.

இந்த அம்சங்களை உள்ளடக்கி ’தி அவுஸ்ரேலியன்’ என்ற இணையத்தளத்தில் வெளியான செய்திக்கட்டுரையை மொழியாக்கம்

கொழும்பின் அழகான கடற்கரையின் ஒரு இடத்தில் பிரித்தானியர் காலத்து கட்டடமொன்றில் அதிகளவு இராணுவம் குவிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சே அவரது செயலகம். அவரது அண்ணன் அதிபர் ராஜபக்சவே பாதுகாப்பு அமைச்சர்.

கடந்த வருடம் மே மாதத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டு போர் முடிவுக்கு வந்திருக்கலாம்.

ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் இருந்து அவரது கவச வாகனத்தின் துணையுடன் மயிரிழையில் உயிர் தப்பிய கோத்தாபய மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்.

20 ஆண்டு இராணுவ சேவையாற்றிய முன்னாள் லெப்டினன் கேணலும் பின்னர் கலிபோர்ணியாவில் தகவல் தொழினுட்பத்துறையில் பணியாற்றியபோது புலிகளைத் தோற்கடிப்பதற்காக அவரது சகோதரரால் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டவருமான கோத்தாபயவே நாட்டின் இரண்டாவது பலம்வாய்ந்த மனிதரென சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதம் தொடர்பான வல்லுநர் றொகான் குணரட்ண தெரிவிக்கிறார்.

இலங்கையில் 26 ஆண்டு காலம் நீடித்து 70,000 பேர் கொல்லப்படுவதற்கும் பல லட்சம் பேர் இடம்பெயர்வதற்கும் காரணமான போரை ”அவர் இல்லாவிட்டால், இலங்கை வெற்றிகொண்டிருக்க முடியாது” என குணரட்ண கூறுகிறார்.

சகோதரர்களுடன் இணைந்துநின்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா போரின் பின்னர் அவர்களுடன் முரண்பட்டு, சனவரியில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 57.8 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள 40 வீத வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டு தோல்வியை சந்தித்தார்.

கடந்த மாதம், இராணுவ உபகரணங்கள் கொள்வனவு ஊழலுக்காக பொன்சேகாவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ராஜபக்சவுக்கும் முன்னாள் இராணுவத் தளபதிக்குமிடையிலான மோதல், போரின் வெற்றியினால் கிடைத்த நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பை இல்லாது செய்துவிட்டது” என கடந்த வெள்ளியன்று டெய்லிமிறர் தனது ஆசிரியர் பத்தியில் குறிப்பிட்டிருந்தது. இந்த மோதல் கொழும்பில் தற்போது பெரிதாக தெரிகிறது.

ஆனால், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இடங்களில் தமது இராணுவ இலக்குகளை நிறைவேற்ற முடியாது களைப்படைந்து, தோல்விகண்ட மேற்கு நாடுகள், போர் வெற்றிகொள்ளப்பட்ட நாடுகளிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக இருக்கின்றன.

ஆயுதப் போராட்டங்களுக்கு எதிராக நீண்ட காலமாக யுத்தம் நடாத்தி வெற்றிகொண்ட மிகக் குறைந்த நாடுகளின் பட்டியலில் தற்போது சிறிலங்காவும் இணைந்துள்ளது.

12 ஆண்டுகளாக நீடித்த கொம்மியூனிசக் கிளர்ச்சியை மலேசியா 1960ல் வெற்றிகொண்டமையே ஆசியாவில் ஒரேயொரு ஒப்பிடக்கூடிய சம்பவம்.

வடக்குக்கிழக்கில் தனிநாடு கோரிப் போராடி முன்னர் அதன் மூன்றிலொரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த புலிகளுடனான ”யுத்தம் மிகப்பெரிய பயங்கரவாத யுத்தம்” என வலியுறுத்துகிறார் கோத்தாபய.

போருக்கு முன்னர் ஆசியாவின் சிங்கப்பூராக விளங்கிய இலங்கையில் இன்று பொருளாதார வளர்ச்சி திடீரென அதிகரித்திருப்பதுடன் சுற்றுலாத்துறையும் ஒரு வருடத்தினுள் 44 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகள் உலகெங்கிலுமுள்ள வர்த்தகர்களால் நிரம்பியுள்ளது. பொருளாதார வளர்ச்சி அண்ணளவாக 8 வீதமாக உள்ளது.

ராஜபக்சவும் அவரது சகோதரரும் அரசியல் தலைமுறையின் வழித்தோன்றல்கள். அவர்களது தந்தையாரும் மாமனாரும்கூட 1936 இலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளனர்.

இறுதியாக இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அவர்களது குடும்பத்திலிருந்து எட்டு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளனர். அதிபர் ராஜபக்ச 1970ல் முதன் முதலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படும்போது அவரே மிகவும் வயது குறைந்தவராக இருந்தார்.

எம்மிடம் மரபுவழி இராணுவமும் அர்ப்பணிப்புள்ள படைவீரர்களும் உள்ளனர். நாம் பெரிய சண்டைகள் யாவற்றிலும் வெற்றிபெற்றோம் ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

இப்படிச் சொல்வது முட்டாள்தனமானது என சிலர் நினைக்கலாம். ஆனால் நான் அதிபருக்கு சகோதரனாக இருந்தது எமது வெற்றிக்கு முக்கியமானது. என்னால் அவருக்கு ஒரு தெளிவான விடயத்தை விளக்க முடிந்தது”

தமக்குள் முரண்பாடு தோன்றாமல் அவர்களால் நெருக்கமாக பணியாற்ற முடியும். கோத்தாபயவுக்கு இராணுவம் மற்றும் புலனாய்வு சேவைபற்றி நன்கு தெரியும். வளர்ந்துவந்த உயர்நிலை அதிகாரிகள் பலரும் அவருக்குக் கீழ் பணியாற்றியிருந்தனர்.

தோல்விக்கான முதலாவது காரணம் இராணுவம் தான் கைப்பற்றிய இடங்களைத் தக்கவைப்பதற்குரிய படைபலம் அதனிடம் இல்லாதிருந்தது.

இயல்பாக, யாராவது பாதுகாப்புச் செயலர் படையினரின் தொகையை மும்மடங்காக அதிகரிக்கவேண்டும் என்று கோரியிருந்தால் சந்தேகம் எழுந்திருக்கும்.

ஆனால் தனது அண்ணனாக இருந்ததால் அதிபர் ராஜபக்ச, ”என்னைப்பற்றிக் கவலைப்படவேண்டிய தேவை இல்லாதிருந்தது” கோத்தாபய இராணுவ சதித்திட்டம் எதனையும் தீட்டவில்லை.

நான் இதுபற்றி அவருடன் கதைத்தது எனக்கு நினைவிருக்கிறது. அதுதான் உனக்குத் தேவையாக இருந்தால், அதனை செய்” என அவர் என்னிடம் கூறினார்.

போர் காலத்தில் மிகவும் நேர்மையான பாதுகாப்பு செயலராக இருந்தார் எனவும் குணரட்ண கூறுகிறார்.

மேலும், நிதி வேறு எங்கும் திசை திருப்பப்படவில்லை.

புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்படவில்லை. ஆனால் வளங்கள் குறிப்பிடக்கூடியளவு அதிகரிக்கப்பட்டன. ”அதனால் எம்மால் பல முனைகளில் போரிட முடிந்தது”

புலிகளும் அதிகளவு இழப்புக்களை ஏற்படுத்திய பின்னரே பின்வாங்கினர். இராணுவம் முன்னேறிய பின்னர் அவர்கள் திரும்ப வரலாம் என நினைத்தனர். ஆனால் அது நிறைவேறவில்லை. தற்போது நாம் அந்த நிலங்களை வைத்திருக்கிறோம்

எல்லா படையினரும் ஒன்றிணைந்திருந்தார்கள். கடற்படையினர் காட்டிலும் சண்டைபிடித்தனர். விமானப் படையினர் விநியோக வழிகளைப் பாதுகாத்தனர். நாம் அண்ணளவாக 150 பட்டாலியன்களை வைத்திருந்தோம். அவர்கள் யாவரும் தாமாக முன்வந்தே படையில் சேர்ந்தார்கள் எனவும் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

இந்தக் காலப்பகுதியில் எமக்கு அதிகளவு இழப்புக்கள் ஏற்பட்டன. இறுதி நான்கு ஆண்டுகளில் இடம்பெற்ற போரில் 6000 படையினர் கொல்லப்பட்டு 20,000 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் நாம் படையினரைப் பிரதியீடு செய்துவிடுவோம்.

இது தஸ்மேனியா அளவில், அவுஸ்ரேலியாவிலுள்ள அளவு சனத்தொகையைக் கொண்டுள்ள ஒரு நாட்டின் சாதனையாகும்.

பூகோள நிதி நெருக்கடி ஏற்பட்டஒரு காலப்பகுதியில் கடன் அடிப்படையிலேயே இலங்கை ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வாங்கவேண்டியிருந்தது.

2008ல் இடம்பெற்ற பீஜிங் ஒலிம்பிக் இற்கு 2 ஆண்டுகள் முன்னரே இலங்கை 85 வீத இராணுவ உதவிகளை வழங்கிவந்த சீனா பாதுகாப்பு முன்னேற்பாடாக ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்திவிட்டது என்று கூறுகிறார் குணரட்ண.

அதனாலேயே இந்தக் காலப்பகுதியில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னர், போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆட்சேர்ப்புப் பெரும் பிரச்சினையாக இருந்தது.

ஆனால் தனது சகோதரனின் தனித்துவமான தலைமைத்துவம் மேலும் பல இளைஞர்களைப் படைக்கு கவர்ந்தது. நாம் இந்தத் தடவை இடைநடுவில் விடப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக பல தடவை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளும் யுத்தநிறுத்தங்களும் தோல்விகண்டன. அவற்றுள் மிகவும் அதிருப்தியைத் தந்தது நோர்வேயின் ஏற்பாட்டில் 2002 இல் ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை.

வெற்றிக்கான இரண்டாவது பிரதானமான காரணி இந்தியாவுடன்நெருக்கமாக இணைந்துசெயற்பட்டது என கோதபாய கூறுகிறார்.

இறுதியாக, இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு அமெரிக்கா அல்லது சீனா அல்லது ஐரோப்பா எவ்வாறு பதிலளித்தது என்பது முக்கியமானதல்ல என அவர் கூறுகிறார்.

வேறு எந்த நாட்டையும் அசட்டை செய்துவிடலாம். ஆனால் 16 மில்லியன் தமிழ் மக்களைக் கொண்டுள்ள இந்தியாவின் எந்த முடிவிலும் அவர்களது செல்வாக்கு இருப்பதால் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

புதுடில்லிக்குச் சென்ற அதிபர் வெளிப்படையாக எமது நாட்டின் நிலமையை எடுத்துவிளக்கினார்.

பின்னர் இருநாடுகளும் தொடர்புக்குழு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டன. சிறிலங்கா சார்பாக கோதபாயவும் அதிபர் ராஜபக்சவின் மூத்த ஆலோசகர் மற்றும் அவரது தலைமை செயலக அதிகாரியும் உள்ளடங்குவர்.

இந்தியா தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளிநாட்டு, பாதுகாப்பு செயலாளர்களும் அடங்குவர்.

இவர்கள் அடிக்கடி கொழும்பிலும் புதுடில்லியிலும் சந்தித்தனர். இந்தியாவுக்கு எல்லாம் தெரியும். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இந்தியாவின் முக்கியத்துவம் தவிர, அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா வழங்கிய புலனாய்வுத் தகவல்கள் முக்கியம் வாய்ந்தவை என்று கூறும் குணரட்ண, ஒப்பறேசன் கலோபைட் 'முக்கியமான நடவடிக்கை' என்று கூறுகிறார். அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தமிழ் மக்களை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி அவுஸ்ரேலிய பெடரல் காவல்துறை நடவடிக்கை எடுத்தபோதும் இந்தக் குற்றச்சாட்டு பின்னர் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பிற்கு ஆதரவளித்ததாகக் குறைக்கப்பட்டது.

போரை வெற்றிகொள்வதில் இறுதியாக முக்கியமாக விளங்கிய காரணி இராணுவ நடவடிக்கைக்கு சமாந்தரமாக மனிதாபிமான நடவடிக்கையையும் திட்டமிட்டது என கோதாபய கூறுகிறார்.

பொதுமக்கள் இடையில் அகப்படுவார்கள். நாம் அவர்களுக்கு எவ்வாறு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிப்பது என்றும் தேவையேற்படுமிடத்து எவ்வாறு வெளியேற்றுவது, மீளக் குடியேற்றுவது, கண்ணிவெடிகளை அகற்றுவது ஆகியன பற்றியே சிந்தித்தோம்.

பொதுமக்கள் பாதுகாப்பாகப் பின்வாங்குவதற்காக சூனியப் பிரதேசங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன எனக் கூறப்படுகின்றபோதும் இவை எவ்வளவு தூரம் பாதுகாப்பாக இருந்தன என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.

புலிகள் அவற்றில் சிலவற்றினுள் ஊடுருவி பொதுமக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாக குணரட்ண கூறுகிறார்.

இறுதி இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் ஐ.நா. நிறுவனங்கள், முக்கியமான தூதுவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச தலைவர்களை உள்ளடக்கிய மனிதாபிமானக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

எம்மால் இதனை 100 வீதம் சரியாகச் செய்ய முடியவில்லை. ஆனால் நாம் இவ்வாறு செய்திராவிட்டால், சூழ்நிலை மேலும் மேலும் மோசமானதாக இருந்திருக்கும்.

தமிழர் தயாகமான வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த 300,000 மக்களில் 90 வீதமானவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டதாகவும் 70 வீதமான நிலப்பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

போரை வெற்றிகொள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட இராணுவ வளங்கள் தற்போது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உதாரணமாக, கொழும்பில் வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காக ஒல்லாந்தரால் கட்டப்பட்டுக் கைவிடப்பட்டிருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த கால்வாய்களை திருத்தி அமைக்கும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் மீன்பிடித்துறையை வளர்த்தெடுப்பதற்காக இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கும் கடற்படை உதவுகிறது. விமானப்படையினர் பொதுமக்கள் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தற்போது முழுமையாகப் பாதுகாப்பானதா? போர் காலத்தில் தற்கொலைத் தாக்குதல்களாலும் ஏனைய தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்கள் அவ்வாறுதான் நம்புகின்றனர்.

ஆனால் இந்தப் போர் 30 ஆண்டுகள் நீடித்தது. மக்கள் சிறுவயதில் படையில் சேர்க்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். நாம் எஞ்சியுள்ள பிரச்சினைகளைக் கையாளுவதற்கு படிப்படியாகத்தான் வேலை செய்யவேண்டும் என கோத்தாபய கூறுகிறார்.

3000 போராளிகள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான மக்களுக்காக புனர்வாழ்வுத் திட்டமொன்றை உருவாக்கி இருப்பதாக குணரட்ண கூறுகிறார்.

புலிகளால் இராணுவ ரீதியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், வெளிநாடுகளில் மீண்டும் அந்த அமைப்பு உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் நாம் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். தற்போது நாம் நாட்டில் உறுதி நிலையையும் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும், என்கிறார் ராஜபக்ச.

உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். எமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும். நாம் இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் அமைதியுடன் வாழவேண்டும். சிங்களவர்களாகவோ அல்லது தமிழர்களாகவோ அன்றி முஸ்லிம்களாகவோ அல்ல.

ஆயுதக்கடத்தல்களைக் கண்காணிப்பதற்காக கடற்படைப்பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவை இங்கு தயாரிக்கப்படுவதில்லை. எனவே பிரச்சினையை உருவாக்க விரும்பும் எவரும் கடலால் அவற்றைக் கொண்டுவரவேண்டும்.

இது இலங்கையில் சுற்றி ஐரோப்பாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் செல்லும் கப்பல்களுக்கும் பாதுகாப்பாக அமையும்.

போர்க் காலத்தில் இலங்கை தனது பிடியை மேலும் இறுக்கியுள்ள சீனா வேகமாக வளர்ந்துவரும் தனது கடற்படையும் பயன்படுத்தக்கூடிய வகையில், ஒரு பில்லியன் டொலர் செலவில் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை நிர்மாணித்து வருகிறது.

சீனாவும் இந்தியாவும் நாட்டின் 'பழைய நண்பர்கள்' என்று கூறுகிறார் கோத்தாபய. அவர்களுக்கிடையே வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் கடந்த காலங்களில் எமக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.

இலங்கைனுடைய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவி தற்போது மிகவும் இன்றியமையாதது, என்றார் அவர்.

நீண்ட காலமாக இலவச கல்வி, சுகாதாரம் ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் சிறிலங்காவின் எழுத்தறிவு 84 வீதமாக உள்ளது. உயர் தொழினுட்பம் உள்ளிட இதனை மேலும் கட்டியெழுப்புவதற்கான தருணம் இதுதான் என கோதபாய கூறுகிறார்.

போர் காலத்தில் மேற்கு நாடுகள் மேற்கொண்ட விமர்சனங்களால் அதிருப்தியுற்றாலும், வெளிநாடுகளில் புலிப் போராளிகள் பலமாக இருப்பதால் அது தவிர்க்க முடியாதது என்கிறார் அவர்.

வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்கள் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தமது ஆதரவைத் தெரிவித்திருப்பதால் அந்த நிலமை படிப்படியாக மாறி வருவதாக அவர் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல