அவர்கள் டி.வி. ஸ்டூடியோவை தாக்கி சேதப்படுத்தினார்கள். அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் அடித்து உதைத்தனர். இதில் 10 பேர் காயம் அடைந்தனர் என்று சேனலின் செயல் அலுவலர் தலால் அல் சயீது தெரிவித்தார். இதுபற்றி தகவல் ஒலிபரப்பு அமைச்சரகம் கூறுகையில், பஜர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தன் சேனலில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சி மூலம் முயன்றார் என்று குற்றஞ்சாட்டுகிறது.
பஜர் கூறுகையில், நல்லதா கெட்டதா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மீது குற்றச்சாட்டுக்களை கூறினார். அரச குடும்பத்தை சேர்ந்த அவர் தகவல் ஒலிபரப்புத்துறையில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார். எங்கள் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அந்த தொகுப்பாளரை தான் தேடினார்கள். இந்த தாக்குதலுக்கு பிறகு நிகழ்ச்சிகள் எதையும் நாங்கள் ஒளிபரப்பவில்லை. என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில் இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.
குவைத் மன்னரை யாரும் விமர்சனம் செய்ய முடியாது. அவருக்கு அரசியல் சட்டம் பாதுகாப்பு அளித்து உள்ளது. பத்திரிகையாளர்கள், மற்றும் இணையதளம் நடத்துபவர்கள் மீது வழக்கு தொடரப்படுவது சர்வ சாதாரணமாகும்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக