இந்தியாவின் யுனைடெட் புரூவரிஸ் குழுமத்தை சேர்ந்தது ஒயிட் அண்ட் மக்கே டால்மோர் டிஸ்டில்லரி நிறுவனம். ஸ்காட்லாந்தில் இயங்கி வரும் இந்நிறுவனம் 3 சிறப்பு விஸ்கி பாட்டில்களை தயாரித்தது. டால்மோர் 64 ட்ரினிடாஸ் என்ற இந்த விஸ்கி 64 ஆண்டுகள் பழமையானது.
மூன்றில் இரண்டு பாட்டில்கள் ஏற்கனவே விற்பனை ஆகிவிட்டன. விஸ்கி வரலாற்றில் இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை ஆகி இருப்பது இதுவே முதல் முறை. இந்த மாத இறுதியில் லண்டனில் நடைபெற உள்ள விஸ்கி கண்காட்சியில் மூன்றாவது பாட்டிலை விற்கப் போவதாக யுனைடெட் புரூவரிஸ் தெரிவித்துள்ளது. இதற்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ட்ரினிடாஸ் உலகிலேயே மிகவும் அரிய மற்றும் பழமையானதாகும். இதுபோன்ற சுவையுடன் இதுவரை விஸ்கி தயாரிக்கப்படவில்லை. இது விலை மதிப்பற்றது" என அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ரிச்சர்டு பாட்டர்சன் தெரிவித்தார். இந்த விஸ்கியை நட்சத்திர ஓட்டல் மற்றும் கிளப்களில் விற்பனை செய்தால், 50 மி.லி. கொண்ட ஒரு கிளாஸ் விலை 20,000 pounds இருக்கும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே விற்பனையான இரண்டு பாட்டில்களில் ஒன்றை அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேஷ் பட்டேல் வாங்கி உள்ளார். தனது ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை மது பாட்டில் கலெக்ஷனில் ட்ரினிடாஸ் மகுடமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பாட்டிலை வாங்கியவர் இங்கிலாந்தில் வசிக்கும் உலகின் முன்னணி விஸ்கி நிபுணரான சுகிந்தர் சிங். "தனிச்சிறப்பு வாய்ந்த மதுவகைகளில் இதுவும் ஒன்று. முதலீட்டு நோக்கத்தில் இதை வாங்கி உள்ளேன்" என சிங் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக