புதன், 20 அக்டோபர், 2010

ரஷியாவின் மாநிலமான செசன்யா சட்டசபையை தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள்

ரஷியாவின் அங்கமாக இருக்கும் செசன்யா மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், அந்த மாநிலத்தை தனிநாடாக மாற்ற தீவிரவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று காலை ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கானவர்கள் குரோஸ்னி நகரில் உள்ள செசன்யா சட்டசபை கட்டிடத்துக்குள் நுழைந்தனர். அந்த கட்டிடத்தை அவர்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றினார்கள். அப்போது சபாநாயகர் டுகுவாக்கா அப்துரகிமானோவ் அந்த கட்டிடத்தில் இருந்தார். அவர் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

சட்டசபை கட்டிடத்துக்கு வெளியே காவலுக்கு இருந்த காவலர்களை விரட்டிஅடித்து விட்டு தீவிரவாதிகள் உள்ளே நுழைந்தனர். சபாநாயகர் அறைக்கு முன்பு தீவிரவாதி ஒருவர் தீக்குளித்தார். காவலுக்கு இருந்த 2 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் அதிரடிப்படையை அரசாங்கம் சட்டசபை கட்டிடத்துக்கு அனுப்பி வைத்தது. அதிரடிப்படையினர் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை போட்டனர். இறுதியில் அவர்கள் தீவிரவாத தலைவர் ஒருவர் உள்பட 2 பேரை சுட்டுக்கொன்று கலவரத்தை ஒடுக்கினார்கள். தீவிரவாதிகளை விரட்டி அடிப்பதற்காக செசன்யா ஜனாதிபதி ரம்சான் கடிரோவ் தாமே முன்னின்று தீவிரவாதிகள் மீதான நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்த தாக்குதல் நடந்த அதேநேரத்தில் வேறு சில அரசாங்க கட்டிடங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல