புதன், 20 அக்டோபர், 2010

இளவரசர் கடத்தப்பட்டது போன்று தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை ஒளிபரப்பக் கூடாது (படங்கள் இணைப்பு)


இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டது போன்று புனையப்பட்ட ஆவணப்படம் ஒன்றை சேனல் 4 ஒளிபரப்ப இருந்தது ஏற்கனவே பல சர்ச்சைகளை உண்டாக்கியது.

ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்ட இளவரசர் ஹரி அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது போன்றும் அவரை விடுவிக்க பிரிட்டன் படையினர் தீவிரவாதிகளுடன் கெஞ்சுவது போன்றும் படமாக்கப்பட்டுள்ளது.

சேர் ஜொக் ஸ்டிருப்

இந்நிலையில் பாதுகாப்புத் துறையின் உயரதிகாரி சேர் ஜொக் ஸ்டிருப் இந்த ஆவணப்படம் நாட்டின் பாதுகாப்பிற்காக ஆப்கானிஸ்தானில் போராடி வரும் வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதால் இதன் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடிதமொன்றை சேனல் 4 நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் அக்கடிதததை அலட்சியப்படுத்திவிட்டது.

மாறாக திட்டமிட்டது போல் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என பதில் கடிதமொன்றை அதிகாரிக்கு அனுப்பியுள்ளது. தீவிரவாதிகள் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பது போன்று புனையப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் வகையில் ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கும் சேனல் 4 இன் நடவடிக்கைகளுக்கு அரண்மனையிலிருந்து பலத்த எதிர்ப்பும் கண்டனக் குரல்களும் கிளம்பியுள்ளன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல