புதன், 20 அக்டோபர், 2010

அபூர்வமான முறையில் மனைவியுடன் இணைந்து தோன்றிய ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் (படங்கள் இணைப்பு)

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் இரகசியமாக விவாகரத்து செய்துள்ளதாக வதந்திகள் பரவி வருகின்ற நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புட்டின் தனது மனைவி லியுட்மிலாவுடன் இணைந்து பொது இடத்தில் தோன்றியுள்ளார்.

மொஸ்கோவுக்கு வெளியேயுள்ள நொவோ ஒகர்யோவோ நகரிலுள்ள புட்டினின் வசிப்பிடத்துக்கு விஜயம் செய்த குடிசன மதிப்பீட்டாளர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு புட்டினும் (58 வயது) அவரது மனைவியும் இணைந்து பதிலளிக்கும் “வீடியோ' காட்சி ஞாயிற்றுக்கிழமை அரசாங்க இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது.

2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி பிரதமராக பதவியேற்ற புட்டின், அந்நாட்டின் அதிகாரத்துவம் பொருந்திய ஒருவராகவே தொடர்ந்து கருதப்படுகிறார்.

அவர் முன்னாள் விமான உபசரிப்பாளரான லியுட்மிலாலை 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு இரு மகள்மார் உள்ளனர்.
புட்டின் அண்மைய வருடங்களில் லியுட்மிலாவுடன் பொது இடத்தில் தோன்றுவதை தவிர்த்து வந்ததையடுத்து, அவர் லியுட்மிலாவை இரகசியமாக விவாகரத்து செய்துள்ளதாகவும் முன்னாள் ஒலிம்பிக் உடற்பயிற்சி வீராங்கனையான அலினா கபயெவாவை திருமணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
அலினா கபயெவா

எனினும் புட்டின் அச்செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் தனது தனிப்ப ட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதாக புட்டின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் புதிய வீடியோ காட்சியில் லியுட்மிலா விபரிக்கையில், ““நாங்கள் திருமணம் செய்துள்ளோம். நான் அவரது மனைவி'' என்று கூறினார்.

புட்டினின் பேச்சாளரான திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ““வதந்திகள் அப த்தமானவை. வேலைப்பழு காரணமாக புட்டின் மனைவியுடன் பொது இடங்களில் தோன்றுவது குறைந்துள்ளது. அவ்வளவு தான்'' என்று தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல