கடந்த 1967 ம் ஆண்டில் நடந்த போரின் போது இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் பாலஸ்தீன நாடு அமைய வேண்டும். அப்படி அமைவது உறுதியானால் இஸ்ரேல் மீது உரிமை கோருவதை அடியோடு கைவிடத் தயாராக இருக்கிறோம்.
பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அமெரிக்கா முயற்சியில் கடந்த மாதம் மீண்டும் பேச்சு தொடங்கியது. யூதர் குடியிருப்பு காலனி கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை இனியும் தொடர முடியாது என இஸ்ரேல் தெரிவித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை முறிந்தது. பாலஸ்தீனர்கள் உரிமை கோரும் நிலங்களை இஸ்ரேல் கையகப்படுத்தும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது எப்படி பலனை கொடுக்கும். இஸ்ரேலை யூதர் நாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்க வேண்டும்.
அப்படி செய்தால் குடியிருப்பு காலனி கட்ட விதித்துள்ள தடையை ஞிட்டிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்திருந்தார். 10 மாத காலமாக அமலில் இருந்த இந்த தடையை ஞிட்டித்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவேன் என்று அப்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேலை யூதர் நாடாக அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக