வெள்ளி, 5 நவம்பர், 2010

சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி

சிறுவன் ஒருவனுடனான காதல் தொடர்பால் 10 வயது சிறுமியொருவர் கருத்தரித்து குழந்தை யொன்றை பிரசவித்த சம்பவம் தென் ஸ்பெயினில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகில் மிகவும் குறைந்த வயதில் குழந்தையை பிரசவித்த தாய்மாரில் ஒருவராக இந்த சிறுமி கருதப்படுகிறார்.

ஜெரெஸ் டி லபுரொன்ரெரா நகர மருத்துவமனையிலேயே மேற்படி சிறுமியின் குழந்தைப் பிரசவம் இடம் பெற்றுள்ளது.

6.3 இறாத்தல் நிறையுடன் பிறந்த மேற்படி குழந்தை ஆரோக்கியமாக காணப்படுவதாக பிராந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரோமானிய வம்சாவளியான சிறுமி சிறுவனான தனது காதலனுடனேயே வசித்து வருவதாகவும் பிறந்த குழந்தையை மேற்படி இளம் தம்பதியின் பராமரிப்பில் வளர ஒப்படைப்பதா இல்லையா என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குழந்தையின் தந்தையான சிறுவனது வயதை அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர்.

உலகின் மிகவும் வயது குறைந்த தாயாக 1939 ஆம் ஆண்டில் குழந்தையை பிரசவித்த பெரு நாட்டைச் சேர்ந்த லினா மெடினா (5 வருடங்கள் 7 மாதங்கள் 21 நாட்கள் வயது) என்ற சிறுமி விளங்குகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல