மிலான் நகரில் மோட்டார் நிறுவனமொன்றை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மொரோக்கோவைச் சேர்ந்த ரூபி ருபா கோ (கமா காயெக்) என்ற 17 வயது நடன மாதுடன் தனது உல்லாச மாளிகையில் மாலைப் பொழுதை களித்தமை தொடர்பில் பெர்லுஸ்கொனி (74 வயது) அண்மையில் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள நிலையிலேயே அவன் இந்த உரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பெர்லுஸ்கொனி ஏற்கனவே இளம் பெண்கள் மற்றும் விலை மாதுகளுடனான பாலியல் தொடர்பு மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
“நான் மிகவும் கடுமையாக வேலை செய்கிறேன். அதனால் நான் மனதை இலகுவாக்க அழகிய பெண்ணொருவரை நாடுவது வழக்கம். தன்னின சேர்க்கையாளராக இருப்பதை விட அழகிய பெண்கள் மீதான நாட்டம் சிறந்தது'' என பெர்லுஸ்கொனி கூறினார்.
பெண்கள் விவகாரங்கள் தொடர்பில் பெர்லுஸ்கொனி விபரிக்கையில், “நான் ஒரு துறவியல்ல'' என்று தெவித்தார்.
இந்நிலையில் பெர்லுஸ்கொனியின் கருத்துக்கு இத்தாலிய தன்னின சேர்க்கை உரிமை குழுவான “ஆர் சி கே' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
““இத்தாலிய பிரதமரின் கருத்து பிற்போக்கானதாகும். அவர் பெண்களையும் தன்னின சேர்க்கையாளர்களையும் அவமதித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என “ஆர் சி கே' குழுவைச் சேர்ந்த போலோ பதென் தெரிவித்தார்.
இந்நிலையில் பெர்லுஸ்கொனியின் உல்லாச வாழ்க்கை முறை குறித்து இத்தாலியிலிருந்து வெளிவரும் அநேக கத்தோலிக்க பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக