இந்த நிலையில் ஒபாமா படம் அச்சிட்ட சட்டைகள் (ரி - சேர்ட்) மும்பையில் பிரபலம் ஆகி வருகின்றன. நமது நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் மட்டுமல்ல, வெளிநாட்டினரும் கூட இந்த ரி சேர்ட்டுகளை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
மும்பையை சேர்ந்த சில்லரை ஜவுளி விற்பனை நிலையத்தை சேர்ந்த விற்பனை அதிகாரி கிஷோர் சாப்ராஜ் பஞ்சாபி இதுகுறித்து கூறியதாவது:-
இளைய தலைமுறையினரிடம் ஒபாமா மிகவும் செல்வாக்கு பெற்றவராகத் திகழுகிறார். ஒபாமா படம் போட்ட ரி - சேர்ட் அணிந்து அவர் மீதான தங்கள் அன்பை இளைய தலைமுறையினர் வெளிப்படுத்த விரும்புகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒபாமா படம் போட்ட ரி - சேர்ட்டுகளை விற்பனை செய்கிறோம். இந்த விற்பனை சக்கை போடு போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக