வெள்ளி, 5 நவம்பர், 2010

உலகில் வயது கூடிய மூதாட்டி மரணம்

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் படி வயது கூடிய பெண்மணியான யூஜினீ பிளன்சார்ட் தனது 114 ஆவது வயதில் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.

'செயின்ட்-பார்த்தலெமின் ' பிரான்ஸ், கரீபியன் தீவுகளின் உள்ள வைத்தியசாலையொன்றிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான இவர் கடந்த 30 வருடங்களாக இவ்வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவர் 1896 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி செயின்ட் - பார்த்தலெமில் பிறந்துள்ளார்.

இவ்வருடமே இவர் உலகின் வயது கூடிய பெண்மணியாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டார்.

இவரின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்க டெக்ஸாஸை சேர்ந்த பெண் ஒருவர், அதி கூடிய வயதானவர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல