வெள்ளி, 5 நவம்பர், 2010

விடுதலைப்புலிகளை உளவுபார்த்த நோர்வேயைச் சேர்ந்த உளவாளி!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர்கள், ஈழ அனுதாபிகள் ஆகி யோரை நோர்வேயில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் கடந்த காலங்களில் நோர் வேயில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், எதிர்ப்பு நட வடிக்கைகள் ஆகியவற்றை அமரிக்காவுக்காக நோர்வேயின் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளில் ஒருவர் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் படம் பிடித்துக் கொடுத்திருக்கின்றார். குறிப்பாக இலங்கை அரசு-தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் சமாதான அனுசரணையாளராக நோர்வே செயல்படத் தொடங்கிய காலம் தொடக்கம் இவ்வளவு பணி இடம்பெற்று வந்திருக்கின்றது. இவ்வளவு பணிகளை அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் நேரடியாக மேற்பார்வை செய்து வந்திருக்கின்றது. அமெரிக்காவின் உளவாளிகளாக செயற்பட்ட நபர் தூதரகத்திற்கு அருகில் உயர்ந்த மாடிக் கட்டிடத்துடன் கூடிய வீடு ஒன்றை உளவுப் பணிமனை ஆக்கிக் கொண்டார்.

தூதரகத்துடன் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் இவ்வீட்டுக்கும்,தூதரகத்துக்கும் இடையில் மிகவும் நுட்பமான முறையிலான தொடர்பாடல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. வீட்டு மொட்டை மாடியில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் படம் பிடிக்கக் கூடியதாக இருந்தமை உளவு பார்க்கும் பணிக்கு மிக வசதியாக அமைந்திருக்கின்றது. தூதரகத்தில் கடமையாற்றும் கனேடிய நாட்டைச் சேர்ந்த ஊழியர் களின் உதவி, ஒத்தாசைகளும் இந் நடவடிக்கைகளுக்கு கிடைக்கப் பெற்று இருக்கின்றன.

இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நாட் களில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக நோர்வேயில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை இந் நபர் புகைப் படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றில் படம் பிடித்துக் கொண்டார். இதனிடையில் இவர் புலம்பெயர் தமிழர் அமைப்புப் பிரமுகர்களாலும், ஊடகவியலாளர்களாலும் கவனிக்கப்பட்டு விட்டார்.

இவர் ஏன் புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களை புகைப் படம், வீடியோ பிடிக்கின்றார்? என்று ஊடகவியலாளர்கள் கண்காணிக்கத் தொடங்கி விட்டனர். கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன.

ஆனால் வீடியோ, புகைப்படம் பிடித்தது அவரின் தனிப்பட்ட விடயம் என்கிறார் அமெரிக்க உளவாளியாக செயற்பட்ட நோர்வே நாட்டவர். நோர்வேயை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது இச்சம்பவம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல