ஜேர்மனிய குடியுரிமை பெற்ற 35 வயதுடைய அகிலன் என்பவர், மடகஸ்காரிலிருந்து டுஸில்டோப் என்ற விமானநிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டு உள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை ஜேர்மனியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு உதவி புரிவது குற்றமாகும். ஜேர்மனியில் உள்ள சில தமிழ் அமைப்புகள், சங்கங்கள் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு ஆதரவு வழங்கி உதவிபுரிந்து வருகின்றன என்றும், கைது செய்யப்பட்ட நபர் அமைப்பாளராக செயற்பட்டு இலங்கையில் உள்ள புலிகளின் செயற்பாடுகளிற்காக அமைப்பாளராக இருந்து செயற்பட்டதுடன் அவர்களது நடவடிக்கைகளிற்கு பொருட்களை அனுப்பி வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள புலி நபர் எவ்வளவு காலம் Madagascar இல் எவ்வளவு காலம் தங்கியிருந்தார் என்பதை சட்டத்தரணி தெரிவிக்காதபோதும் கைது செய்யப்பட்டுள்ள நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக