வெள்ளி, 5 நவம்பர், 2010

6 ஆம் மாடியிலிருந்து விழுந்த குழந்தை எதுவித காயமுமின்றி உயிர் தப்பியது

6 மாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த 18 மாத குழந்தையொன்று எதுவித காயமின்றி அபூர்வமான முறையில் உயிர் தப்பிய சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.

பெற்றோர் குழந்தையை அறையில் தனியே விட்டுவிட்டு சென்ற சமயம் பிறிதொரு குழந்தையுடன் விளையாடிய மேற்படி குழந்தை, எவ்வாறோ ஜன் னலில் ஏறி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை மாடிக் குடியிப்பின் கீழிருந்த தேநீர் சாலையின் கூரைப்பகுதியிலான விரிப்பில் விழுந்துள்ளது.

விரிப்பிலிருந்து குழந்தை தரையில் விழுவதற்கு முன் அங்கிருந்த ஒருவர் குழந்தையை கையில் ஏந்தி காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தைக்கு எதுவித காயமோ எலும்பு முறிவோ ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. தனது மனைவியுடனும் மகனுடனும் அவ்வழியாக சென்ற ஒருவரே குழந்தையை கையில் ஏந்தி காப்பாற்றியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல