ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் திருமதி இமெல்டா சுகுமார் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் தனது சாட்சியத்தில் கூறியதாவது, கடந்த வருடம் ஜனவரி 22-ம் திகதி வன்னியில் இருந்து வெளி யேறி வவுனியாவுக்குச் சென்று அங்கிருந்து இறுதி யுத்தம் தொடர்பாக அவதானித்தேன். விடுதலைப்புலிகள் இறுதிவரைக்கும் மக்களை வெளி யேறவிடவில்லை.தமது பாதுகாப்பு கேடயங்களாக மக்களைப் பயன் படுத்தினர்.
இதேவேளை இறுதிவரைக்கும் விடு தலைப்புலிகள் பாஸ் வழங்கும் நடை முறையையே கொண்டிருந்தனர். கடந்த 18 வருடங்களாக இருந்த அனுமதிப்பத்திர நடைமுறையால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கினர். வெளி இடங்களுக்குச் செல்லும் மக்கள் இவ்வாறான பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.இவர்களில் நானும் ஒருவர். இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த இமெல்டா சுகுமார், இறுதிக் கட்ட யுத்தத்தின்போது, அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள்.
இதனால் இராணுவம் மக்களையும் விடுதலைப்புலிகளாக கருத வேண்டி ஏற்பட்டது.தமிழீழ விடுதலைப்புலிகள் தமது அனுமதியின்றி அரச படையினரி டம் சரணடையச் சென்ற பொதுமக் களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஆனால் இராணுவத்தினர் ஒரு போதும் சரணடைய வந்த மக்களைச் சுடவில்லை. இராணுவத்தினர் மக்களைச் சரணடையுமாறே கோரினார்கள்.
யுத்தத்தின் போது இராணுவத்தினர் மக்களுக்கு நிறைய உதவிகளை மேற்கொண்டனர். அத்தியாவசிய திணைக்களத்திடமிருந்து திருகோண மலையிலிருந்து முல்லைத்தீவுக்கு கப்பல் மூலம் பொருட்கள் அனுப்பப் பட்டன. அப்போது கறுப்பு நிற வாகன மொன்றில் விடுதலைப்புலிகள் அக்கப்பலை காத்துக் கொண்டிருந்த தாக சிலர் என்னிடம் தெரிவித்தனர். அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட பொருட்களில் 80 சதவீதமானவை மக்களைச் சென்றடைந்தன. ஏனைய 20 சதவீதமானவை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. என்னுடன்முல்லைத்தீவில் வேலைசெய்த அதிகாரிகள் இருவர் வெளிவிவகார அமைச்சின் பரீட்சை எழுதுவதற்காக கொழும்பு செல்ல வேண்டியிருந்தது.
எனினும் கடைசிவரை அவர்கள் கொழும்பு செல்ல விடுதலைப்புலி கள் அனுமதிக்கவில்லை. இது தொடப்பாக நான் வெளிவிவ கார அமைச்சுக்கு அறிவித்தேன். எனினும் அவர்கள் இக்காரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் நான்கூட யுத் தத்தின் காரணமாக காயப்பட்டுள்ளளேன். எனினும் அது சிறு காயம். அப்போது ஊடகவியலாளர்கள் யாரும் என்னைப் பார்க்க அனுமதிக்க வில்லை.அச்சந்தர்ப்பத்தில் நான் காயப்பட்டபோது சிவப்பு நிறச்சட்டை அணிந்திருந்தேன்.இதனால் தூரத்திலிருந்து என்னை கண்டவர்கள் நான் பாரிய காயத் துக்குள்ளானதாகத் தெரிவித்தனர். யுத்தத்தின் இறுதிவரை முல்லைத் தீவு வைத்தியசாலையில் நான்கு வைத்தியர்கள் அங்கு தொழிற்பட்டுக் கொண்டிருந்தனர்.
அவ்வைத்தியசா லையின் மூலம் ஏராளமான நோயா ளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. யுத்தத்தின் போது மன்னார், கிளி நொச்சிப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வந்துசேர்ந்தனர். இச்சமயம் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியிலேயே நிர்வாகத்தை மேற் கொண்டேன். அரசாங்கம் மாத்திரமே உதவி செய்தது.அப்போது எந்தவொரு தொண்டர் நிறுவனங்களும் முல்லைத் தீவில் இயங்கவில்லை. ஆனால் ஐ.சி.ஆர்.சி.மாத்திரம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இடம்பெயர்ந்து அகதிகளாக்கப் பட்ட மக்களில் 60 வீதமான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் 30 வீதமான மக்கள் குடியேற் றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக