குறித்த மர்ம வாலிபர்கள் குழு சரத் பொன்சேகா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோதும், நீதி மன்றத்திலிருந்து அழைத்துச் செல் லப்பட்ட போதும் அவரை சமீபிக்க முயன்றார்கள் .ஆயினும் அவர்களின் நடத்தை யில் சந்தேகம் கொண்ட பொன்சேகா வின் ஆதரவாளர்கள் மர்ம வாலிபர் களை சரத் பொன்சேகாவின் அருகில் நெருங்க விடாத வண்ணம் பலத்த ஆட்சேபத்தை வெளிக்காட்டினர். அது மாத்திரமின்றி காதில் கடுக்கனும் கைகளில் வளையல் போன்ற வையும் அணிந்து ஒருவித தோற் றத்துடன் காட்சியளித்த பிரஸ்தாப வாலிபர்கள் குழு ஊடகவியலாளர் களின் கடமைக்கும் இடைஞ்சல் விளைவித்துள்ளார்கள்.
ஊடகவியலாளர்கள் சரத் பொன் சேகாவை நெருங்க முற்பட்ட சமயங்களில் எல்லாம் மர்ம வாலிபர்கள் குழு வழியை அடைத்துக் கொண்டு நின்றதுடன் தங்களைத் தவிர யாரும் சரத் பொன்சேகாவை அணுகாத வண்ணம் பார்த்துக் கொண்டார்கள். ஆயினும் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களிடம் இருந்து மர்ம வாலிபர்கள் தொடர்பில் வெளிப்பட்ட எதிர்ப்பு வலுவடையவே,பொலிஸார் ஏதோ சைகை செய்ய அந்த வாலிபர்கள் குழு நொடியில் நீதி மன்ற வளாகத்திலிருந்து மாயமாக மறைந்துவிட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரஸ்தாப சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகா கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் அர்ஜுனரண துங்காவை தொடர்பு கொண்ட போது, நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற போதிலும் எங்களைக் கூட உடம்புவரை பரிசோதித்தபின்பே சரத் பொன்சேகாவின் அருகில் செல்ல அனுமதிக்கின்றனர்.
ஆயினும் இன்று அந்த மர்ம வாலிபர்கள் தொடர்பில் பொலிஸார் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது அசிரத்தையாக செயற்பட்டனர் என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக