புதன், 17 நவம்பர், 2010

வெளுப்பாக்கும் ரசாயனத்தை அருந்தக்கொடுத்து 12 வயது மகனை படுகொலை செய்த தாய்

மனநலம் பாதிக்கப்பட்ட தனது 12 வயது மகனுக்கு குளியலறைகளை வெளுப்பாக்குவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனத்தை அருந்தக் கொடுத்து படுகொலை செய்த தாயொருவர் தொடர்பான வழக்கு திங்கட்கிழமை பிரித்தானிய நீதி மன்றமொன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது.
சத்பால் கோர் சிங்(44 வயது)

கிழக்கு லண்டனிலுள்ள பார்கிங் எனும் இடத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான சத்பால் கோர் சிங்(44 வயது) என்ற இந்த பெண்மணி, அஜித் என்ற தனது மகனை இவ்வாறு படுகொலை செய்துள்ளார்.

அஜித்தின் பராமரிப்பு தொடர்பில் உள்ளூர் நகரசபையின் சமுகசேவை பிரிவுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கத் தவறியிருந்ததால், அஜித்தின் பராமரிப்பை அப்பிரிவு பலவந்தமாக பொறுப்பேற்கலாம் என்ற அச்சத்திலேயே இந்தப் படுகொலையை அவர் செய்ததாக கூறப்படுகிறது.

படுகொலையை செய்த சத்பால் கோர் சிங், பொலிஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ““நான் எனது மகனை படுகொலை செய்துவிட்டேன். நானும் தற்கொலைக்கு முயற்சித்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.

சத்பால் கோர் சிங் மனநல பிரச்சினைகளுக்கு உள்ளான ஒருவர் என அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல