புதன், 17 நவம்பர், 2010

மகனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தாயே மதுவை வழங்கி வந்த துயரம்

திருத்த முயற்சித்த தாயொருவர் அது பயனளிக்காது போனதையடுத்து, மகனை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நோக்குடனும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் பாதுகாக்கும் வகையிலும் தானே மதுவை தினம் வழங்கி வந்த சம்பவமொன்று வெலிமடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இறுதியில் குற்றச் செயல் ஒன்றில் ஈடுபட்ட குறித்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, “தாயே தனக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து வந்ததாக' விசாரணையின் போது கூறியுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில் தெயவருவதாவது, கடந்த 15 ஆம் திகதி வெலிமடை அரசினர் மருத்துவமனையில் கடமையாற்றி வரும் தாதியொருவரின் வீட்டுக்குள் புகுந்த குறித்த இளைஞன் ஒருவன் திருட முயற்சித்துள்ளான். இந்நிலையில் அவன் குறித்த தாதியினால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட் டதையடுத்து அவன் தாதியின் கையை கடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளான்.

இதையடுத்து தாதி, பொலிஸாடம் இச்சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளான். இதன்போது தனது தாயார் அன்றாடம் தனக்கு மதுவை வழங்கியதாகத் தெரிவித்துள்ளான்.

இது தொடர்பில் குறித்த இளைஞனின் தாயாரை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர்.

விசாரணையின் போது இளைஞனின் தாயார் கூறுகையில், எனது மகனை நன்றாகப் படிக்க வைக்க, பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தேன். ஆனால், எனது முயற்சி எவ்வகையிலும் பயனளிக்கவில்லை. எனது விருப்பத்திற்கு மாறாக எனது மகன் நண்பர்களுடன் சேர்ந்து மதுவிற்கு அடிமையாகி விட்டான்.

இதனையும் என்னால் தடுக்க முடிய வில்லை. எனது மகன் நண்பர்களுடன் சேர்ந்து தேவையற்ற பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு விடுவான் என்ற அச்சத்தில், அவனை வெளியில் எங்கும் செல்ல வேண்டாமென்று தடுத்து, அவனுக்கு தேவைப்படும் மதுவினைக் கொடுத்து வீட்டிலேயே தங்க வைத்தேன்.

வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த எனது மகன் 15.11.2010 எனக்கும் தெரியாமல் வெலிமடை அரசினர் மருத்துவமனையில் கடமையாற்றும் தாதியொருவரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்த போது வீட்டுரிமையாளரான தாதி, எனது மகனைப் பிடிக்கப் போக, எனது மகன் தாதியின் கைக ளைக் கடித்து விட்டு தப்பியோடியிக்கின்றார்'' என்றார்.

தாதியின் கைகளில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் தாதி வெலிமடை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல