புதன், 17 நவம்பர், 2010

பிரித்தானிய எழுத்தாளருக்கு 6 வார சிறை

பிரித்தானிய பிரபல எழுத்தாளர் அலன் ஷட்ராக்கிற்கு 6 வார சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதி மன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

மரண தண்டனை தொடர்பாக தன்னால் எழுதப்பட்ட “வன்ஸ் எ ஜொலி ஹாங்மான்: சிங்கப்பூர்ஸ் ஜஸ்டிஸ் இன் த டொக்' (“Once a Jolly Hangman: Singapore’s Justice in the Dock”) என்ற நூலில் அவர் சிங்கப்பூர் நீதித்துறையை அவதூறு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 20,000 அமெரிக்க டொலரை தண்டப் பணமாக செலுத்தவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனது புத்தக வெளியீட்டை ஆரம்பித்து வைக்கும் முகமாக கடந்த ஜுலை மாதம் சிங்கப்பூருக்கு விஜயம் செய்த போதே அலன் ஷட்ராக் கைது செய்யப்பட்டார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல