புதன், 17 நவம்பர், 2010

இலங்கையில் மோசடியில் ஈடுபட்ட இரு இந்திய தமிழர்கள் தலைமறைவு

இந்திய நாவல்களை இறுவட்டுக்களுக்கு பதிவு செய்து அவற்றை விநியோகித்து அதற்கென சந்தா உறுப்பினர்களைச் சேர்த்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்து வந்தமை தொடர்பில் கண்டி பொலிசார் நேற்று முன்தினம் 6 பேரை கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த மோசடி இடம்பெற்ற நிலையத்தை நடத்தி வந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு இந்தியத் தமிழர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையத்தில் உறுப்பினர்களாக இணைபவர்களிடம் சுமார் 14,500 ரூபா முற்பணம் அறவிடப்படுவதாகவும், இவ்வாறு முற்பணம் செலுத்திய சுமார் 1900 உறுப்பினர்கள் இருப்பதாகவும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டி இராஜகிரிய வீதியில் அமைந்துள்ள இவ் மோசடி நிலையம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்தே கண்டி மத்திய பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப்பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் மாலை நிலையத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

இத்தேடுதலின்போது இங்கு தொழில் பார்த்தவர்கள் என சந்தேகத்தின் பேல் 6 பேரை பொலிஸார் கைதுசெய்தனர்.

இச்சோதனையையடுத்து இந்நிலையத்தை நடத்தி வந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு இந்தியத் தமிழர்கள் தலைமறைவாகியுள்ளனர். பொலிஸார் இது குறித்து தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல