புதன், 17 நவம்பர், 2010

சர்வதேச போலீசால் தேடப்பட்டவர் சென்னையில் கைது!

பிரான்சில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தலைமறைவாகி, சர்வதேச போலீசால் தேடப்பட்ட நபரை, சென்னையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் எரிக் மார்ட்டின்(53). இவர், கடந்த 1996லிருந்து 99ம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டில் இருந்த போது அனாதை இல்லம் நடத்தி வந்தார். அந்த விடுதியில் தங்கியிருந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் ஒன்பது பேரை எரிக் கற்பழித்தார். இது தொடர்பாக பிரான்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, எரிக்கை கைது செய்தனர். எரிக் ஜாமீனில் வெளிவந்த நிலையில், அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வெளிவந்த போது எரிக் தலைமறைவானார். சர்வதேச போலீசார் அவரை தேடி வந்தனர். பிரான்சில் இருந்து கள்ள பாஸ்போர்ட் மூலம் தப்பி நேபாளம் வந்த எரிக், 2001ம் ஆண்டில் இந்தியா வந்து, பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டியாக பணிபுரிந்தார். சென்னை வந்த எரிக், மாதவரத்தில் அறை எடுத்து தங்கியுள்ளார். இங்கும் வழிகாட்டியாக பணியாற்றிய எரிக், மொழி பெயர்ப்பு பணியும் செய்து வந்துள்ளார்.

எரிக் மார்ட்டின் தப்பியது குறித்து தமிழக டி.ஜி.பி.,க்கு சமீபத்தில், சர்வதேச போலீசார் தகவல் அளித்தனர். தமிழகம் முழுவதும் தங்கியுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள் குறித்த தகவல்களை உளவுப்பிரிவு போலீசார் சேகரித்தனர். அப்போது, மாதவரம் பகுதியில் எரிக் மார்ட்டின் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி., கண்ணப்பன் உத்தரவின் பேரில், எஸ்.பி., சம்பத்குமார், டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில் போலீசார் மாதவரம், நடேசன் தெருவில் உள்ள எரிக் மார்ட்டின் வீட்டில் நேற்று காலை அவரை கைது செய்தனர். அவரது வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தியதில் போலி பாஸ்போர்ட்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இன்று காலை எரிக் மார்ட்டின் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல