புதன், 17 நவம்பர், 2010

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் சினிமாவில் நடிக்கிறார்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் சினிமாவில் நடிக்கிறார். தி ஹேங்க் ஓவர்-2 என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இது ஒரு காமெடி படம் ஆகும். இதில் கிளிண்டன் காமெடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கிளிண்டனும் அங்கு விரிவுரை நிகழ்த்துவதற்காக தாய்லாந்து சென்று இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு வெளியான ஹேங்க் ஓவர் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தான் அதன் தொடர்ச்சியாக தான் ஹேங்க் ஓவர்-2 படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல