புதன், 17 நவம்பர், 2010

இலங்கை அகதிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்ற வழக்கில்,தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பா.ம.க.செயலர் கைது!

இலங்கை அகதிகளை, புலிகள் உட்பட வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ம.க., செயலர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.

இலங்கை அகதிகள் 15 பேரை புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப, கடந்த மாதம் 4ம் தேதியன்று சிலர் முயற்சித்தனர். இது தொடர்பாக புதுச்சேரி சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் வீராம்பட்டினத்தைச் சேர்ந்த தி.மு.க., கவுன்சிலர் சக்திவேல், சிலோன் கண்ணன், காரைக்கால் மாவட்ட பா.ம.க.,செயலர் தேவமணி உட்பட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள மாவட்ட பா.ம.க., செயலர் தேவமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவமணி மீதான வழக்குகள் குறித்து பட்டியலிட்டு காரைக்கால் மாவட்ட கலெக்டர் பிராங்க்ளின் லால்டிங்குமாவிற்கு சி.ஐ.டி., எஸ்.பி., ரவீந்திரன் அறிக்கை அனுப்பினார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து தேவமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரி சி.ஐ.டி., போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்ட தேவமணி, காலாப்பட்டிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல