நான் தாத்தாவுடனும் பாட்டியுடனும் இருக்கிறேன். என ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க வந்த ஐந்தே வயதான கயல்விழி கூறினார். இது தொடர்பாக அவரது தாத்தாவான 61 வயதுடைய தர்மகு லசிங்கம் கூறுகையில்: எனது மகளின் பெயர் சுரேகா. மருமகனின் பெயர் உபேந்திரக்குமார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகனும் ஒரு மகளும் கயல்விழி மூத்தவள் கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி புதுமாத்தளன் மக்கள் குடியிருப்புகள் மீது ஷெல் மழை பொ ழியப்பட்டது. இந்த தாக்குதல் அதிகாலை 2.40 மணியளவில் இடம்பெற்றது. இதனால் கயல் விழியின் பெற்றோர்களும் ஒரு வயதும் இரண்டு மாதங்களுமேயான கயல்விழியின் தம்பியும் மரணமானார்கள். அதிஷ்டவசமாக காயங்களுடன் கயல்விழி உயிர்தப்பினார்.
ஆணைக்குழு முன் சாட்சியமளித்த எனது பேத்தியான கயல்விழிக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவே நான் இங்கு வந்தேன். அடுத்த வருடத்திலிருந்து கயல்விழி ஆரம்பப்பாடசாலைக்குச் செல்ல உள்ளார். எமக்கு பாரியளவிலான பொருளாதார நெருக்கடி உள்ளது என தர்மகுலசிங்கம் குறிப்பிட்டார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக