தென்கொரியாவை சேர்ந்த ஒருவரே இப்பார்சலை அனுப்பியிருந்தார். இதனால் சியோலில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டிலும் பதட்டம் நிலவியது.
தென்கொரிய தலைநகர் சியோலில், கடந்த இரண்டு நாட்களாக ஜி-20 நாடுகளின் ஐந்தாவது உச்சி மாநாடு நடைபெற்றது. இதனால் அந்நகரில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நேற்று மாநாடு நடந்து கொண்டிருந்த போது, சியோல் நகரின் தபாலக ஊழியர் ஒருவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இளைய மகள் சஷா பெயரில் ஒரு பார்சல் வந்திருப்பதாகப் பாதுகாப்புப் பொலிசாரிடம் தெரிவித்தார்.
இதனால் பதற்றமடைந்த பாதுகாப்பு பொலிசார், அதை எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் சோதனையிட்டனர். பார்சலுக்குள் உருண்டை வடிவத்தில் பல பொருட்கள் இருந்தமை தெரிய வந்தது.
இதையடுத்து உஷாரடைந்தனர் பொலிசார். பார்சலுக்குள் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், வெடிகுண்டைச் செயலிழக்க செய்யும் நிபுணரையும் மோப்ப நாயையும் வரவழைத்தனர். பார்சலை பிரித்து சோதனையிட்டனர்.
உள்ளே பேரிக்காய்கள் இருந்தன. நிம்மதி பெருமூச்சு விட்ட னர் பொலிசார். சியோல் நகரின் ஒரு பகுதியான, புசன் என்ற பகுதியைச் சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவரே அதை அனுப்பி வைத்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பார்சல் அனுப்பிய முதியவருக்கு அது ' திருப்பி அனுப்பப்பட்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக