சனி, 13 நவம்பர், 2010

கண்களால் கண்ட நேரடி காட்சிகளுக்கு இரகசிய சாட்சியமளிக்க நாம் விரும்பவில்லை

கண்களால் கண்ட நேரடி காட்சிகளுக்கு இரகசிய சாட்சியமளிக்க நாம் விரும்ப வில்லை இறுதி நேர யுத்தத்தின் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட எனது மகனுக்கு என்ன நடந்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிந்து கூற வேண்டும் என ஆணைக் குழு முன் வயோதிப பெற்றோர்கள் சாட்சி யமளிக்கையில் கேட்டுக் கொண்டனர்.

யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் நீர்வேலி அமர்விலேயே மேற்படி பெற்றோர்கள் ஆணைக்குழு முன்னிலையில் இவ்வாறு கேட்டுக்கொண்டனர். இவர்கள் இங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில்: எனது பெயர் நகேந்திரம் ரவீந்திரன் இது எனது மனைவி பரமேஷ்வரி நகை செய்யும் தொழிலை செய்து வருகிறார். எனது மூன்று பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தக் கொண்டு வந்தேன். எனது மகனான சதீஷ் மிகவும் கெட்டிக்காரன் எந்தவிதமான தீய செயல்களிலும் ஈடுபடமாட்டான். எல்லா சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக நடந்து கொள்வான் எனது மகன் தொடர்ந்தும் கல்வி கற்றிருந்தால் நிச்சயமாக ஒரு வைத்தியராக வந்திருப்பான்.

யுத்தம் காரணமாக 1996ஆம் அண்டு இடம் பெயர்கையில் எனது மகனை சதீஷை விடுதலைப் புலி புறுப்பினர்கள் அழைத்து சென்றனர். இதன் போது எனது மகனை தடுக்க நானும் எனது மனைவியும் இரு பெண் பிள்ளைகளும் கடுமையாக போராடினோம்.

ஆனால் பயனில்லை. அவர்கள் எனது மகனை அழைத்து சென்றனர். அதன்போது எனது மகன் என்னிடம் அப்பா நான் இவர்களை சமாளித்து விட்டு திரும்பவருகிறேன் அம்மாவையும் தங்கைகளையும் கவனமாக கூட்டிச் செல்லுங்கள் எனக் கூறினார்.

எனது மகன் விருப்பத்துடன் புலிகள் இயக்கத்திற்கு செல்லவில்லை அழைத்துச் செல்லப்பட்டார். இதன் பின்னரும் மகனுடன் எங்களுக்கு தொடர்பு இருந்தது. யுத்தத்தின் போது எனது மகன் கொல்லப்படவில்லை. என்பது எனக்கு உறுதியாக தெரியும். ஏனெனில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதாவது 2009 மே மாதம் 17 ஆம் திகதியும் எனது மகன் எங்களுடன் தொடர்பு கொண்டார். ஆகவே எனது மகன் சரணடைந்து இருக்கவேண்டும் அல்லது இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே, எம்ள்ளங்களில் நம்பிக் கையை ஏற்படுத்தியுள்ள இந்த ஆணைக் குழு எனது மகனை மீட்டுத்தர வேண்டும் எனக் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல