சனி, 13 நவம்பர், 2010

மாநகர சபை உறுப்பினர் பிரபாகரன் என்னைத்தாக்க முற்பட்டார் – முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன்!

எனக்கு விடுத்த அழைப்பின் பேரிலேயே நான் மட்டக்களப்பு மாநகர மேயரின் விடுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் நேற்றைய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப்பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு வரும் பஸ் தரிப்பிட கடைத்தொகுதி தொடர்பான கூட்டமொன்று நேற்றுக்காலையில் நடைபெறுவதாகவும் அதில் தன்னையும் கலந்து கொள்ளுமாறும் எனக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது.

ஆனால் காலையில் வேறு முக்கிய நிகழ்வு இருந்ததால் மாலையில் அக்கூட்டத்தை நடாத்துமாறு கூறினேன். அதன்படி அக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் நானும் அக்கூட்டத்திற்கு சென்றேன்.

அக்கூட்டத்தில் எனது ஆதரவான மாநகர சபை உறுப்பினாகளுக்கும் இன்னும் சில உறுப்பினர்களுக்குமிடையில் சிறயளவிலான கைகலப்பும் கலவரமும் ஏற்பட்டது.

அப்போது மாநகர சபை உறுப்பினர் பிரபாகரன் என்னைத்தாக்க முற்பட்டார். அதன் போது எனது மெய்ப்பாதுகாவலர்கள் என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்து விட்டனர். அத்துடன் நான் வெளியேறி விட்டேன். என முதலமைச்சர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல