சனி, 13 நவம்பர், 2010

சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்துவது அவசியம்

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கி யிருந்த சிங்கள மக்கள் இப்போது நாவற் குழியில் குடியேறியுள்ளனர். நாவற்குழியிலுள்ள அரச காணியில் அவர்கள் குடியேறியதாக கூறப்படுகின்றது. நாவற்குழியில் அரச காணி இருப்பதாக அவர்கள் எப்படி அறிந்தார்கள். அந்த இடம் எப் படி அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்தக் கேள் விகளைக் கேட்பது நமக்கு அழகல்ல என்பதால் அதனை அப்படியே விட்டுவிடலாம்.

ஆனால் சிங்கள மக்கள் குடியேறிய நாவற் குழி அரச காணியில் ஏற்கெனவே தமிழ் மக்கள் குடியிருந்துள்ளனர்.இருந்தும் தென்மராட்சியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அவர்கள் இடம்பெயரவேண்டிய தாயிற்று. அவ்வாறு இடம்பெயர்ந்திருந்தாலும் தற்போது நிலவக்கூடிய சாதாரண சூழ்நிலை யில், அங்கிருந்த மக்கள் மீளக் குடியமர்வதற் காக சென்றுள்ளனர். இருந்தும் அப்பகுதி கிராம சேவையாளர் அதனைத் தடுத்துள்ளார்.

கிராமசேவையாளர் தடுப்பதற்கு உயரதிகாரிக ளின் அறிவித்தல்கள் காரணமாக இருந்திருக் கலாம்.எதுவாயினும் அரச காணியில் குடியிருந்த மக்கள் காணியற்றவர்கள் என்பது தெரிந்த விட யமே. யுத்தம் காரணமாக அவர்கள் இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் தாங்கள் இருந்த இடத்தி லேயே அவர்கள் மீளவும் குடியமரமுடியும். இருந்தும் எங்கள் அதிகாரிகளின் வழமை யான தடுத்துநிறுத்தும் பணியால் அந்த இடத் தில் இருந்த மக்கள் தங்கள் இடத்தை இழக்க வேண்டியதாயிற்று.

சட்டங்களின் பிரகாரமே, ஏற்கெனவே குடியி ருந்த தமிழ் மக்கள் மீளக் குடியிருப்பதற்கு அனு மதி மறுக்கப்பட்டதெனத் தடுத்து நிறுத்திய அதிகாரி கள் கூறுவார்களாயின், நல்லது; அந்த சட்டத் தை இப்போதும் செய்யவேண்டுமல்லவா?இந்த நாடு முழுவதற்கும் ஒரேசட்டம் என்றால் அதை நடைமுறைப்படுத்துவது உங்கள் கடமை.

அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடிய வில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி, நீதி கேட்கவேண்டும். உங்கள் பொறுப்பற்ற தன்மையால் ஏழை மக்கள் இன்று வீதியில் நிற்கும் அவலம். இதற்கு மேலாக இப்போது நாவற்குழியில் இருக்கக் கூடிய எஞ்சிய அரச காணியில் குடியமர தமிழ் மக்களும் துணிந்துவிட்டனர்.

நிலைமை இதுவாக இருக்கும்போது அதனை அதிகாரிகள் தடுக்க முற்பட்டால் சிலவேளை அவர்கள் தமது மரியாதையைக் குறைத்துக் கொள்ளவேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே சட்டத்தை சரியானமுறையில்- பாகுபாடின்றி அமுல்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். அப்போதுதான் இன ஒற்றுமையும் அமைதியும் ஏற்பட முடியும்.

வலம்புரி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல