வியாழன், 18 நவம்பர், 2010

நம்பிக்கை ஒளியைப் பரப்பிய விடுதலைப் போராளியே உங்களுக்கு வாழ்த்துக்கள்

பிரிந்து வேறாகிப் போன தேசத்தின் இருண்ட மூலை முடுக்கெல்லாம் நம்பிக்கையின் ஒளியைப் பரப்பிய விடுதலைப் போராளியே மனமகிழ்வுடன் கூடிய ஆரோக்கியமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுதந்திரத்தின் பின்னர் இலங்கைத் தாய் நாட்டிற்குக் கிடைத்த உன்னத மக்கள் தலைவன் இரண்டாவது ஜனாதிபதிப் பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டும் ஜனாதிபதி அவர்களின் 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் பிரதம அமைச்சர் என்ற வகை யில் இந்த இதயங்கனிந்த நல்வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

மக்களினால் கிரீடம் அணிவிக்கப்படும் பெரும்பாலான அரசியல்வாதிகள் மத்தியில் நாட்டின் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு மக்களினால் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப்படும் மக்கள் தலைவர்கள் உருவாகுவது ஞானம் மற்றும் அர்ப்பணிப்பு என்ப வற்றின் மூலமாகும். ஜனாதிபதி மஹிந்த ரா ஜபக்ஷ அவர்களை இந்த நாட்டின் அதிர்ஷ்டத்திற்குக் கிடைத்த மாபெரும் தலைவர் என அழைப்பது மிகைப்படுத்திக் கூறும் ஒரு விடயம் என நான் ஒருபோதும் கருத மாட்டேன். 30 வருட சாபக்கேடாக இருந்த யுத்தத்தில் இருந்து இலங்கைத் திருநாட்டையும் இங்கு வாழும் இரண்டு கோடி மக்களையும் மீட்டெடுத்த விடயமே அவரது உறுதியான தலைமைத்துவத்திற்கான சான்றாகும். யுத்தம் நடைபெற்ற வேளையில் நாட்டின் அபி விருத்தியை நோக்காகக் கொண்ட முன்னோடித் திட்டங்களை இனங்கண்டு அவற்றை நடைமுறைப்படுத்தத் தேவையான நிதியினை வழங்கி நாட்டினதும் பொதுமக்களினதும் எதிர்கால சுபிட்சத்துக்காக அவர் அளப்பரிய அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளார். இச்சிறிய நாட்டை ஆசியாவின் புதுமையாக மாற்றுவதற்காக நாம் அனைவரும் காணும் கனவின் ஆரம்ப வைபவமாக அவரது உன்னத எண்ணக் கருவின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைகத்தினைக் குறிப்பிடலாம்.

நுரைச்சோலை அனல்மின் நிலையம், மொர கஹகந்த நீர்மின் திட்டம், சர்வதேச விமான நிலையம் என்பன இந்த மாபெரும் மக்கள் தலைவர் காணும் கனவு மட்டுமன்றி அவையாவும் எனதும் உங்களதும் நாளைய பிள்ளைகள் அனுபவிக்கப் போகும் யதார்த்தங்களுமாகும்.

மக்கள் தலைவனுக்கும் மக்கள் சேவகனுக்கும் உள்ள வித்தியாசத்தை உண்மையாகவே தெரிந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உண்மையான தலைவன் சேவகனின் நிலையில் இருந்தே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணக் கருவின் அடிப்படையில் தனது வாழ்க்கைத் தத்துவத்தை அமைத்துக் கொண்ட ஜனாதிபதி அவர்கள், இந்த நாட்டின் பிள்ளைகளின் மட்டுமன்றி, பெரியவர்களான எங்கள் அனைவரதும் “கொள்கைப் பற்றுமிக்க தந்தை' என்பதில் விவாதத்திற்கு இடமில்லை என நான் நம்புகின்றேன்.

பிரிந்து வேறாகிப் போன தேசத்தின் இருண்ட மூலை முடுக்கெல்லாம் நம்பிக்கையின் ஒளியைப் பரப்பிய விடுதலைப் போராளியே! மனமகிழ்வுடன் கூடிய ஆரோக்கியமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! உரித்தாகட்டும் என வாழ்த்துகின்றேன்.

மக்களின் ஆசீர்வாதத்துடன் நீண்ட காலம் நம் தேசத்திற்கு நிழல் கொடுக்கும் பெருவிருட்சம் நீங்கள்! உங்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி பிரார்த்திக்கின்றேன்!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல