வியாழன், 18 நவம்பர், 2010

விடுதலையைப் பெற்றுத்தாருங்கள் உங்கள் பின்னால் அணிதிரளத்தயார்: ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான கடிதம்

எம்மை விடுதலை செய்து குடும்பத்தாருடன் வாழ விடுங்கள். அவ்வாறு செய்தால் உங்களுக்குப் பின்னால் அணி திரளத் தயாராக உள்ளோம் என்று புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 65 வயதில் காலடி பதிக்கும் ஜனாதிபதிக்கு எமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நேரில்தான் வாழ்த்துத் தெரிவிக்க முடிய வில்லை. சிறைக் கூண்டுக்குள் இருந்து மடல் மூலமாவது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவிக்கின்றோம்.

ஐயா கடந்த காலம் போய்விட்டது பாதி வாழ்வு போய்விட்டது. மீதி வாழ்வு கொஞ்சம் இருக்கின்றது. அந்த வாழ்வை எமது குடும்பங்களுடன் வாழ்வதற்கு வழி வகுத்துத் தாருங்கள்.

நீங்கள் மிகவும் உயர்ந்த மனம் கொண்டவர். எல்லோருக்கும் சந்தர்ப்பம் கொடுத்து வாழ்வளிக்கும் மனித நேயம் கொண்டவர்.

உத்தம மனிதன். நீங்கள் நினைத்தால் 5 தொடக்கம் 17 வருடங்களாக மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை விடுவிக்கலாம். நாங்கள் பல முறைகள் உங்களுக்கு எமது நிலைமைகள் பற்றி பத்திரிகை மூலமும் அமைச்சர்கள் மூலமும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் பல கடிதங்கள் அனுப்பி வைத்தோம். அது உங்கள் கரம் கிடைத்ததோ தெரியாது? நீங்கள் எமக்கு ஒரு வாழ்வைத் தாருங்கள். கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும். தவறுகள் செய்து இருந்தால் எம்மை மன்னித்து எமக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்.

நீங்கள் ஏழைகளுக்கு உதவும் நோக்கத்தில் இருக்கும் உயர்ந்த மனிதன். இளமைக் காலத்தை நாங்கள் சிறையிலே கழித்து விட்டோம். நீங்கள் நினைத்தால் எமக்கு விடுதலையோ அல்லது பிணையோ அல்லது பொது மன்னிப்போ வழங்குவீர்கள். 2ஆவது பதவிக் காலத்தில் எமக்கு விடுதலையைத் தாருங்கள்.

நாங்களும் உங்களுடன் சேர்ந்து உங்கள் பின்னால் அணி திரள தயார்.

நாங்கள் அனைவரும் உங்களிடம் கேட்பது என்னவென்றால் ஒரு மனிதன் தவறு செய்தால் மன்னிப்பு வாய்ப்பளிக்கக்கூடாதா? இனி நாங்கள் உங்களின் பிள்ளைகளே.

எனவே நீங்கள் எங்களுக்கும் எமது குடும் பங்களுக்கும் துன்பங்களில் இருந்து விடுதலை தாருங்கள்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல