வியாழன், 18 நவம்பர், 2010

கணணி விளையாட்டிற்கு அடிமையான சிறுவன் தாயைக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளான்

அளவுக்கதிகமாக கணனி விளையாட வேண்டாம் என கண்டித்த தாயாரை படுகொலை செய்த 15 வயது மகன், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது.

புஷன் நகரில் வசித்த மேற்படி சிறுவன் தனது தாயை படுகொலை செய்து விட்டு குழாயொன்றில் கயிற்றைக் கட்டி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான்.

மேற்படி சிறுவனின் 12 வயது சகோதரியே இந்த படுகொலை மற்றும் தற்கொலை குறித்து அயலவர்களிடம் தெரிவிக்கவும் அவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட சிறுவன் கணனி விளையாட்டுக்கு அடிமையாகி அதில் மூழ்கியிருப்பதால் அவனுக்கும் அவனது தாயாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழமை என தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல