இந்த மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று ரஷியாவும், வாடிகனும் கேட்டுக்கொண்டன. அவர் வயதை கருதி அவரை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும் என்று அந்த நாடுகள் கேட்டுக்கொண்டன.
இந்த நிலையில் அவரது மரணதண்டனைக்கான உத்தரவில் ஈராக் ஜனாதிபதி ஜலால் தலாபானி கையெழுத்திட மறுத்து விட்டார். இது தொடர்பாக அவர் பிரஞ்சு டி.வி.சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிஇருப்பதாவது:-
தாரிக் அஸீஸுக்காக நான் பரிதாப்படுகிறேன். ஏனெனில் அவர் ஈராக்கி கிறிஸ்தவர். அதோடு அவர் 70 வயதை தாண்டிய முதியவர். அதனால் அவரை தூக்கிலிடும் உத்தரவில் கையெழுத்து போட மாட்டேன்.
இவ்வாறு ஜலால் தலாபாணி கூறினார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக