வியாழன், 18 நவம்பர், 2010

மகளின் திருமனத்தை தடுத்து நிறுத்த போலி குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்த தாய்

திருமணம் செய்வதற்காக வெளிநாடு செல்லும் மகளைத் தடுப்பதற்காக, தனது மகள் விமானமொன்றை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக பொலிஸாருக்கு போலியாக எச்சரிக்கை விடுத்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதன்கிழமை ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்ய நகரான யரோஸ்லவ்வில் வசிக்கும் மேற்படி தாய் (வயது 56), தனது மகள் (வயது 33) வெடிகுண்டுகளுடன் புறப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து மொஸ்கோ நகலிருந்து மொரோக்கோ புறப்படவிருந்த குறிப்பிட்ட விமானம் பல மணி நேர தாமதத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தலை விடுத்த குற்றச்சாட்டில் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொரோக்கோ பிரஜை ஒருவரின் மீது காதல் கொண்ட தனது மகள், தனது காதலரை திருமணம் செய்வதற்காக மொரோக்கோ புறப்பட ஆயத்தமான போது, செய்வதறியாது அவரைத்தடுத்து நிறுத்தும் முகமாக போலியான இந்த அச்சுறுத்தலை விடுத்ததாக மேற்படி தெரிவித்துள்ளார்.

விசாரணைகளையடுத்து மகள் மொரோக்கோவுக்கு வேறொரு விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல