வியாழன், 18 நவம்பர், 2010

உலகின் குள்ளமான பெண் (படங்கள், காணொளி இணைப்பு)

இரண்டே கால் அடி உயரம், 6.8 கிலோ எடை கொண்ட ஹடிசி கொசாமன் என்பவர் உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். துருக்கி நாட்டின் கடிர்லி பகுதியில் 21 வயதுடைய ஹடிசி கொசாமன் வசிக்கிறார். அண்மையில் கின்னஸ் உலக சாதனைகளை பட்டிலிடும் குழுவினர் ஹடிசியின் உயரம் மற்றும் எடையை பரிசோதனை செய்தனர். பின்னர் இரண்டே கால் அடி (71 செ.மீ.) உயரம், 6.8 கிலோ எடையுள்ள ஹடிசி உலகின் குள்ளமான பெண் என்று அறிவித்து, 2010ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரின் பெயரை பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து ஹடிசி கூறுகையில், “நான் பள்ளிக்கு செல்லும் போது சக மாணவர்கள் என் உயரம் குறித்து கிண்டல் செய்வார்கள். ஆனால், குள்ளமாக இருப்பதை எண்ணி நான் கவலை பட்டதில்லை. என்றாவது ஒரு நாள் இதற்கு ஓர்  அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. உலகின் குள்ளமான பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. குள்ளமாக இருந்து சாதனை படைத்து பிரபலமானது மூலம், தற்போது நான் உயர்ந்த இடத்தில் இருப்பதை உணர்கிறேன். மேலும் உலகின் பிரபலமான பல்வேறு மனிதர்கள் குறிப்பாக உலகின் உயர்ந்த மனிதரை சந்திக்க விரும்புகிறேன்Ó என்று ஹடிசி தெரிவித்தார்.

அவரது பெற்றோர் இப்ராகிம், ஹடன் கூறுகையில், எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் மற்ற குழந்தைகள் பிறக்கும் போது இருப்பது போன்றுதான் ஹடிசியும் இருந்தாள்.

ஆனால் நாளடைவில் அவளின் வளர்ச்சி தடைபட்டது. அதற்கு எலும்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பே காரணம் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். இருப்பினும் வீட்டில் தங்களுக்கு சிறு, சிறு இயன்ற வேலைகளை அவள் செய்து கொடுப்பாள் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல