கைக்குழந்தையாக இருந்த போது கடத்தப்பட்ட பெண்ணொருவர் தனது கடத்தல் மர்மத்தை தானே துப்புத் துலக்கிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கர்லினா வைட் என்ற மேற்படி பெண் கடத்தப்பட்டு 23 வருடங்களின் பின் தனது உண்மையான தாயுடன் மீள இணைந்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 நாள் குழந்தையாக இருந்த கர்லீனா கடத்தப்பட்டார்.
இந்நிலையில் அவர் தான் யார் என்பது தொடர்பில் ஆராய ஆரம்பித்தார்.
அதற்காக அவர் மேற்கொண்ட மரபணு பரிசோதனை மூலம் ஜோய் வைட் என்பவரே தனது உண்மையான தாய் என்பதை கண்டறிந்தார்.
1987 இல் பிறந்து 19 நாள் குழந்தையாக இருந்த கர்லினா சுகவீனற்ற நிலையில் ஹர்லெம் மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது மருத்துவத்தாதி உடையில் வந்த பெண்ணொருவர் கர்லினாவை கடத்திச் சென்றுள்ளார்.
காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க கர்லினாவின் பெற்றோர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் யுவதியாக வளர்ச்சியடைந்த கர்லினா, தன்னை வளர்த்த பெண்மணி போலியான சமூக பாதுகாப்பு அட்டையை பயன்படுத்துவதை அவதானித்து சந்தேகம் கொண்டார்.
இதனையடுத்து கர்லினா, தேசிய காணாமல் போன மற்றும் தவறாக நடத்தப்படும் சிறுவர்களுக்கான நிலையத்தை அணுகி விபரங்களைச் சேகரிக்க முயன்றார். இதன்போது அங்கிருந்த காணாமல் போன குழந்தை ஒன்றின் புகைப்படம் தன்னைப் போல் இருந்ததை உணர்ந்து, அக்குழந்தையின் தாயாரான ஜோயை தொடர்பு கொண்டார்.
இதனையடுத்து மேற் கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளில் ஜோயே தனது உண்மையான தாய் என்பதை கர்லினா கண்டறிந்தார்.
தற்போது பொலிஸார் கர்லினாவை வளர்த்த பெண்மணியை தீவிர விசாரணைக் குட்படுத்தியுள்ளனர்.

கர்லினா வைட் என்ற மேற்படி பெண் கடத்தப்பட்டு 23 வருடங்களின் பின் தனது உண்மையான தாயுடன் மீள இணைந்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 நாள் குழந்தையாக இருந்த கர்லீனா கடத்தப்பட்டார்.
அன் பெட்வே
கனெக்ரிகட்டைச் சேர்ந்த அன் பெட்வேயால் வளர்க்கப்பட்ட அவருக்கு, அவர் தனது உண்மையான தாயல்ல என்ற உணர்வு ஏற்பட்டது.இந்நிலையில் அவர் தான் யார் என்பது தொடர்பில் ஆராய ஆரம்பித்தார்.
அதற்காக அவர் மேற்கொண்ட மரபணு பரிசோதனை மூலம் ஜோய் வைட் என்பவரே தனது உண்மையான தாய் என்பதை கண்டறிந்தார்.
1987 இல் பிறந்து 19 நாள் குழந்தையாக இருந்த கர்லினா சுகவீனற்ற நிலையில் ஹர்லெம் மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது மருத்துவத்தாதி உடையில் வந்த பெண்ணொருவர் கர்லினாவை கடத்திச் சென்றுள்ளார்.
காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க கர்லினாவின் பெற்றோர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் யுவதியாக வளர்ச்சியடைந்த கர்லினா, தன்னை வளர்த்த பெண்மணி போலியான சமூக பாதுகாப்பு அட்டையை பயன்படுத்துவதை அவதானித்து சந்தேகம் கொண்டார்.
இதனையடுத்து கர்லினா, தேசிய காணாமல் போன மற்றும் தவறாக நடத்தப்படும் சிறுவர்களுக்கான நிலையத்தை அணுகி விபரங்களைச் சேகரிக்க முயன்றார். இதன்போது அங்கிருந்த காணாமல் போன குழந்தை ஒன்றின் புகைப்படம் தன்னைப் போல் இருந்ததை உணர்ந்து, அக்குழந்தையின் தாயாரான ஜோயை தொடர்பு கொண்டார்.
இதனையடுத்து மேற் கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளில் ஜோயே தனது உண்மையான தாய் என்பதை கர்லினா கண்டறிந்தார்.
தற்போது பொலிஸார் கர்லினாவை வளர்த்த பெண்மணியை தீவிர விசாரணைக் குட்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக