திங்கள், 24 ஜனவரி, 2011

மலையில் அமைந்துள்ள அற்புத வெந்நீரூற்று

துருக்கியின் டினிஸில் மாகாணத்தில் அமைந்துள்ள பமகல வெந்நீரூற்று மிகவும் பிரசித்தி வாய்ந்தது. உலகிலேயே இது ஒன்று தான் அற்புத வெந்நீரூற்றாகத் திகழ்கின்றது. இது யுனஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்படும் பரம்பரைச் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெண்டிரஸ் நதிப்பள்ளத்தாக்கு தான் பமகலவின் அமைவிடம். இதிலிருந்து தூய வெந்நீர் வெளியேறுகின்றது. பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் காணப்படும் இது, கல்சியம் காபனை அதிகளவு கொண்டிருப்பது சிறப்பம்சம். எப்போதுமே இதனுடைய வெப்பநிலை 35 பாகையிலிருந்து 100 பாகை செல்சியஸ் வரை காணப்படும்.

இதன் நீர் சுண்ணாம்புக் கலவையை அதிகளவில் கொண்டிருப்பதால், நீர் பாய்ந்து வரும் பகுதிகளில் செடி மென்ரரி என்றழைக்கப்படும் பாறைகள் உருவாகின்றன.

இப்பாறைகள் ஐஸ் கட்டிகள் போன்றே தோற்றமளிக்கும். இதனை பஞ்சுக் கோட்டை என்று அழைப்பர். மலையிலிருந்து 100 மீட்டர் அடிப்பாகத்தில் இவை அமைந்துள்ளன.

பமகல, 17 நீரூற்றுக்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வெவ்வேறு வகையான வெப்பநிலையைக் கொண்டவை. இதில் நீராடினால் நோய்கள் குணமாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.

இவ்வெந்நீரூற்றுக்களைச் சென்றடைய பள்ளத்தாக்கின் கீழேயும் மேலேயும் பல வீதிகள் போக்குவரத்து வசதிகளுக்காக அமைக்கப்பட்டன. ஆனால் இவ்வீதியில் மோட்டார் வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.

அது மட்டுமன்றி, இவ்வெந்நீரூற்றுக்களுக்குக் காலணிகளுடன் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இயற்கையின் அரும்பெரும் சொத்தான பமகல வெந்நீரூற்றுக்களைப் பாதுகாக்க பற்பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல