டுபாயில் இலங்கைப் பெண்ணொருவரை பாலியல் ரீதியில் தொந்தரவுக்கு உட்படுத்தியதாக எகிப்திய பிரஜையொருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லிப்ட் இயந்திரமொன்றில் இருந்து வெளியேறியபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக டுபாய் குற்றவியல் நீதிமன்றமொன்றில் 21 வயதான மேற்படி பெண் தெரிவித்தார்.
நான் லிப்டில் சென்றுகொண்டிருக்கும்போது மேற்படி நபர் நான் இந்தியரா என்று கேட்டார். நான் இலங்கையர் என பதலளித்தேன். பின்னர் என்னுடன் இருக்கும் இளைஞர் குறித்து கேட்டார். அவர் எனது சகோதரன் எனக் கூறினேன். அதன்பின் அவர் லிப்டில் இருந்து வெளியேறியபோது அவர் என்னை நெருங்கி வந்து எனது வலதுபக்க மார்பகத்தை பிடித்துவிட்டு சென்றார். சில நொடிகளில் என்னிடம் அவர் திரும்பி வந்து மன்னிப்பு கோரினார் என அப்பெண் தெரிவித்தார். அம்மனிதரின் நடத்தை குறித்து நான் மிகவும் சங்கடமடைந்தேன். நான் மீண்டும் மேலே சென்று எனது மைத்துனியின் கணவரிடம் கூறினேன்.
அவரிடம் எனது மைத்துனியின் கணவர் விச்சரித்தபோது அம்மனிதர் தனது செயலுக்காக மீண்டும் மன்னிப்பு கோரினார். எனினும் நாம் மன்னிப்பை ஏற்காமல் பொலிஸாரை வரவழைத்தோம் எனவும் அப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் அந்த எகிப்தியர் தான் அப்படி இந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையென கூறுகிறார்.
இவவழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மேலதிக விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக