திங்கள், 24 ஜனவரி, 2011

அஸ்தியை போதைவஸ்து என நினைத்து புகைத்த கொள்ளையர்கள்

நபரொருவரதும் இரு நாய்களதும் சடலங்களது அஸ்தியை சட்டவிரோத போதைப் பொருள் என நினைத்து களவாடிச் சென்று புகைத்த இரு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மத்திய புளோரிடா மாநிலத்திலுள்ள சில்வர் ஸ்பிறின்ஸ் குரோஷல் நகரிலுள்ள பெண் ஒருவரின் வீட்டில் நுழைந்த 5 கொள்ளையர்கள், அங்கிருந்த இரு சாம்பல் கொள்கலன்களை போதைவஸ்து என தவறாக நினைத்து களவாடிச்சென்றனர்.

அந்த கொள்கலன் ஒன்றில் குறிப்பிட்ட பெண்ணின் தந்தையின் அஸ்தியும் பிறிதொரு கொள்கலனில் இரு நாய்களது அஸ்தியும் இருந்தன.
திருடர்கள் மேற்படி அஸ்தியுடன் அவ்வீட்டிலிருந்த இலத்திரனியல் உபகரணம் மற்றும் ஆபரணங்கள் என்பவற்றையும் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் இந்த 5 இளைஞர்களும் இந்த அஸ்தியை போதைவஸ்து எனக் கருதி புகைக்க முயன்ற போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல