காதலர் செல்லமாக கடித்ததால் பெண்ணொருவர் இடது கை செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நியூஸிலாந்தில் இடம் பெற்றுள்ளது.
சம்பவ தினம் மேற்படி பெண்ணின் (44 வயது) காதலர், காதல் உணர்வு மிகுதியால் அப்பெண்ணின் கழுத்துப் பகுதியை செல்லமாக கடித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்று ஒரு சில தினங்களின் பின் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மேற்படி பெண்ணின் இடது கை செயலிழந்தது.
இதனையடுத்து அவர் ஆக் லான்ட் நகரிலுள்ள மிடில் மோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கழுத்தில் ஏற்பட்ட காயமே அவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு காரணம் என்பதை கண்டறிந்தனர். காதலர் கடித்ததால் கழுத்தின் முக்கிய குருதிக்குழாயில் ஏற்பட்ட காயம் காரணமாக குருதி உறைந்தமையால் அப்பெண்ணின் இடது கைக்கான குருதி விநியோகம் தடைப்பட்டமையாலேயே அவரது கை செயலிழந்ததாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ரெடி வூ தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சைக்கு பின் அப்பெண் தற்போது குணமடைந்து வருவதாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக