திங்கள், 24 ஜனவரி, 2011

ஜேர்மனிய கவர்ச்சி நடிகை ஸெக்ஸி கோரா பரிதாப மரணம்

தனது கவர்ச்சிகரமான தோற்றத்தால் ஜேர்மனிய திரைப்பட ரசிகர்களை ஆட்டிப்படைத்த கரோலின் பெர்ஜர் (ஸெக்ஸி கோரா எனும் செல்லப்பெயர்) , தனது மார்பகத்தை பெரிதாக்குவதற்கான 6 ஆவது சத்திரசிகிச்சையை அடுத்து கோமா நிலைக்கு சென்று உயிரிழந்துள்ளார்.
பாலியல் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் பெற்ற பெர்ஜர், கடந்த வருடம் ஜேர்மனிய “பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அவர் தனது கவர்ச்சிகரமான தோற்றத்தை மேம்படுத்த பல தடவைகள் மார்பகத்தை பெதாக்குவதற்கான தொடர் அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டார். தனது மார்பகத்தை “70 எப்' அளவிலிருந்து “70 ஜி' அளவுக்கு பெரிதாக்குவதற்கான அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்ட போது கோமா நிலைக்குச் சென்றார். அவர் தனது மார்புகள் ஒவ்வொன்றிலும் பொருத்தப்பட்டுள்ள செயற்கை சிலிக்கன் மார்பக விரிவுபடுத்தல் பகுதிகளின் அளவை 500 கிராமிலிருந்து 800 கிராமாக உயர்த்த விரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறுவைச் சிகிச்சையின் போது பெர்ஜருக்கு இரு தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெர்ஜருக்கு மார்பக விரிவுப டுத்தல் சத்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

பெர்ஜரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்தும் அதனை அலட்சியம் செய்து அவரது வேண்டுகோளுக்கிணங்க சிக்கல்மிக்க மார்பக அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டதே அவரது மரணத்துக்கு காரணமென சந்தேகிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல