சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen´s Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார்.
இவர் பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். ஐக்கிய இராச்சியத்தின் 1940 முதல் 1945 வரை மீண்டும் 1951 முதல் 1955 வரை பிரதமராக பதவி வகித்த சர்ச்சில் இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக கருதப்படுகிறார்.
சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளர், பிரித்தானிய இராணுவத்தின் அதிகாரி, வரலாற்றியலாளர், அவரது எழுத்திற்காக நோபல் பரிசு பெற்றவர், வரைவாளர் போன்ற சிறப்புப் பெருமைகளையும் கொண்டவர். போர் தந்திரமிக்கவர் என்பதை இராணுவத்தில் பணிபுரிந்தபோதே நிருபித்தவர். இந்தியா, சூடான், இரண்டாம் போயர் போர்களில் களம் கண்டவர்.
மேற்கு முன்னணியருடன் முதலாம் உலகப்போரில் பிரித்தானியா போர்புரிந்தபோது ராயல் ஸ்காட் பியூசிலர்ஸ் போரின் 6 வது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி அதன் வெற்றியில் பங்கு கொண்டார். தீடீரென தோன்றிய இரண்டாம் உலகப்போரின் போது முதல் கோமகனின் கப்பற்படைத் தலைவராக நிவிலி சாம்பர்லின் பதவி விலகலைத் தொடர்ந்து மே 10., 1940 அன்று நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமாராகப் பதவியேற்று பிரித்தானிய இராணுவத்தினரை அச்சு சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தியன் மூலம் வெற்றியை நிலைநாட்டினார்.
சர்ச்சிலின் சிறப்புமிக்கப் பேச்சினால் பிரித்தானிய மக்களும், நேச நாட்டு சக்திகளும் புது உந்துதல் பெற்றனர் என்பது மிகையாகாது. 1945 ல் நடந்தத் தேர்தலில் தோல்வயுற்றதால் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். மீண்டும் 1951 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் 1955 ல் ஒய்வு பெறும் வரை பதவியில் தொடர்ந்தார். இரண்டாம் இராணி எலிசபெத் ஆல் இலண்டன் கோமகன் (Duke of London) பதவி வழங்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் சர்ச்சிலின் மகன் ராண்டால்ப் சர்ச்சில்- சர்ச்சிலின் மறைவுக்குப் பின் மரபுரிமைப் பெறுவார் என்று எழுந்த எதிர்ப்பலையால் அம்முயற்சி கைவிடப்பட்டது. இராணி சர்ச்சிலின் இறப்பை இராச்சியத்தின் துயரமாக அனுசரிக்க ஆணையிட்டு சர்ச்சிலுக்கு இறுதி மரியாதை செய்தார். உலகத்தில் எவருக்கும் இம்மாதிரி இறுதி மரியாதை நடைபெறவில்லை என்கின்ற அளவுக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து இறுதி மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------
1841: கலிகுலா என அறியப்பட்ட ரோம மன்னன் கையுஸ் சீசஸ் படுகொலை செய்யப்பட்டான்.
1857: தெற்காசியாவின் முதலாவது பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.
1862: ருமேனியாவின் தலைநகராக புகாரெஸ்ட் தெரிவுசெய்யப்பட்டது.
1918: ரஷ்யாவில் கிறகரியன் கலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.
1924: ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பர்க் என முன்னர்அறியப்பட்ட பெட்ரோகார்ட் நகரின் பெயர் லெனின்கிராட் என மாற்றப்பட்டது.
1939: சிலியில் இடம்பெற்ற பூகம்பத்தில் சுமார் 5000 பேர் பலியாகினர்.
1966: பிரான்ஸ், இத்தாலி எல்லையில் எயார் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால் 117 பேர் பலி.
1972: இரண்டாம் யுத்தத்தின் முடிவிலிருந்து குவாம் காட்டில் மறைந்திருந்த ஜப்பானிய படைவீரர் சோய்ச்சி யோகோஸ் கண்டுபிடிக்கப்பட்டார்.
1986: வொயேஜர் 2 விண்கலம் யுரானஸ் கிரகத்தை 81500 கிலோமீற்றர் தொலைவில் கடந்து சென்றது.
1993: துரக்கிய பத்திரிகையாளர் உகுர் முக்கு, கார் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.
1996: ரஷ்யாவுக்காக உளவுபார்த்தாக குற்றம் சுமத்தப்பட்ட போலந்து பிரதமர் ஜோசப் ஒலெக்ஸி இராஜினாமாச் செய்தார்.
2003: அமெரிக்காவில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் செயற்பட ஆரம்பித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக