திங்கள், 24 ஜனவரி, 2011

இரவில் வளரும் தலைமுடி

ஒவ்வொருவருக்கும், ஒரு மாதத்தில் சுமார் முக்கால் அங்குல நீளம் தலைமுடி வளர்ச்சியடைகின்றது. ஆனால் தினமும் ஒரே மாதிரியான அளவில் முடி வளர்வதில்லை.

தலை முடி ஒருவித இயைபின் போக்கில் வளர்கிறதாம். பொதுவாக இரவு நேரத்தில் தலைமுடி அதிகமாக வளர்வதாகக் கணக்கிட்டுள்ளனர். குறிப்பாக இரவு பத்து மணி முதல், பன்னிரெண்டு மணிக்குள்ளாக வேகமாக வளர்கிறது.

அதன் பிறகு வேகம் குறைந்து விடுகின்றது. பொதுவாகவே முடியின் வளர்ச்சி வேகம் குறைவு தான். முடியின் வளர்ச்சியை நம் கண்ணால் காண முடியாத ஒன்றாகும்.

உடலில் உள்ள முடிகளெல்லாம் தனித்ததொரு வேர் உடையவை. இவை வெவ்வேறு அளவில் வளர்ச்சியடைகின்றன. சிலரின் முடிமென்மையாக இருக்கும்.

சிலரின் முடி சற்று முரடாக இருக்கும். முடி சற்று முரடாக உள்ளவர்கள் சற்று முன் கோபம் அதிகமாக உள்ளவர்களாக இருப்பார்களாம். நம் உடலில் உள்ள முடியும், நகங்களும் நாம் இறந்த பின்பும் சில நாட்கள் வரை வளரும் தன்மை பெற்றவையாகும்.

ஆண்களின் தலைமுடி வளர்ச்சியைக் காட்டிலும் பெண்களின் தலைமுடி வளர்ச்சியின் வேகம் அதிகமாகும். பெண்களுக்குத் தலை வழுக்கை ஏற்படுவதில்லை. ஆண்களுக்கு மட்டுமே வழுக்கை ஏற்படுகின்றது என்பது இயற்கை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல