23 ஆவது மாடியிலிருந்து விழுந்த பெண்ணொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்த சம்பவம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற் றுள்ளது.
ஆர்ஜன்டீனாவின் தலைநகர் புயனொஸ் அயர்ஸிலுள்ள கிறவுண் பிளாஸா பனாமெகனோ ஹோட்டலின் 23 ஆவது மாடியிலிருந்து விழுந்த மேற்படி பெண் (30 வயது), கீழே நிறுத்தப்பட்டிருந்த வாடகைக்காரின் மீது விழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார்.
காரின் முன் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு காரின் முன் ஆசனத்தில் விழுந்த அந்தப் பெண் காயமடைந்த நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி வாடகைக் காரின் சாரதி, குறிப்பிட்ட பெண் காரின் மீது விழுவதற்கு சில நிமிடங்களின் முன்பே காரை விட்டு வெளியேறியிருந்தார்.
வாடகைக்கார் சாரதி மிகுயல் விபரிக்கையில், ““நான் அப்பெண் விழுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே காலிருந்து வெளியேறினேன். இல்லாவிட்டால் நானும் கொல்லப்பட்டிருப்பேன்'' என்று கூறினார்.
““காரின் மீது பாய சத்தத்துடன் அந்தப் பெண் விழுந்த போது, நான் காலிருந்து 10 மீற்றர் தூரத்தில் இருந்தேன்'' என்று அவர் தெரிவித்தார்.
அப்பெண் ஹோட்டல் மாடி தடுப்புச் சுவரில் ஏறி கீழே குதித்ததாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக