மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்வாய்ப்பைப் பெற்றுச் செல்வோர் அந்நாட்டு வேலை வழங்குநர்களினால் மிகவும் மோசமாக அடிமைகளைப் போன்று நடத்தப்படுவதாக புகார்கள் மலிந்துவருகின்றபோதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச்செல்வோரின் தொகையில் வீழ்ச்சியேற்பட்டதாகத் தெரியவில்லை.
நாட்டில் நிலவும் வறுமை, பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு நிலைமை நன்கு தெரிந்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லவே செய்கிறார்கள்.
இதேவேளை ஜோர்தானுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச்சென்ற இலங்கையர்கள் பலர் தங்களை இலங்கைக்கு திரும்ப அனுமதிக்கக் கோரி ஜோர்தான் தலைநகரான அம்மானில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்குரிய சம்பளம் மறுக்கப்பட்டமை மற்றும் துஷ்பிரயோகம் போன்ற காரணங்களினால் வேலையை ராஜினாமா செய்த இந்த 96 ஊழியர்களும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த ஊழியர்களின் உரிமையைப் பெற்றுக் கொள்ளவும் அவர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யவும் தாங்கள் முயன்று வருவதாகவும் எனினும் வதிவிட அனுமதிக் காலம் முடிவடைந்தும் இவர்கள் இங்கு தங்கியுள்ளதால் தண்டப் பணம் செலுத்தினால் மாத்திரமே ஜோர்தானை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இலங்கைத் தூதரக வட்டாரங்கள் அம்மானில் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்கள் பல் வேறு வகையான நெருக்கடிகளுக்கும் கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியவர்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலானோருக்கு அவர்கள் பயணங்களை ஆரம்பிக்கும்போதே துயரங்களும் ஆரம்பித்து விடுகின்றன. தம்வசமுள்ள பொருட்கள், பண்டங்களை விற்பனை செய்தும் வட்டிக்குப் பணம் பெற்றும் குறித்த முகவர்களுக்கு வழங்கி மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புப் பெறும் இவர்களுக்கு எதிர்பார்த்த சம்பளம் நிம்மதியான வாழ்க்கையும் துரதிஷ்டவசமாக கிட்டுவதில்லை. உறுதியளிக்கப்பட்டவாறு வேலைவழங் குநர்கள் உரிய சம்பளம் வழங்காது போவதுடன் அவர்கள் வெறுமனே அடிமைகளைப் போன்றே நடத்தப்படுகின்றனர். அதுமாத்திரமன்றி பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.
மேலும் இலங்கையிலிருந்தும் பணிப்பெண்களாக சென்ற சிலபேருக்கு என்ன ஆனது என்றுகூட அறிய முடியாத நிலையில் அவர்களது உறவினர்கள் கண்ணீர் வடிப்பதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பணிப்பெண்கள் தங்கள் உறவினர்களுடன் தொடர்புகொள்வதற்கு வேலை வழங்குநர்கள் அனுமதியளிப்பதில்லை. அதனைமீறி அவர்கள் தொடர்பு கொள்ள முயன்றால் பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கும் தண்டனைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியேற்படும்.
அண்மையில் நபர் ஒருவர் தனது மனைவி மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்று இரு வருடங்கள் கடந்த நிலையிலும் அவருடனான தொடர்பு எதுவும் கிட்டவில்லை எனவும் அவருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து கூறுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பில் ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதுமாத்திர மன்றி இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் சிலர் ஈவிரக்கமின்றி நடத்தப்படுவதுடன் அவர்களின் சேம நலன்களைக்கூட அறியடியாத நிலைமையே இருந்து வருகின்றது.
இவை அனைத்துக்கும் மேலாக அண்மையில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணான ஆரியவதி என்பவரின் உடலில் 21 ஆணிகள் செலுத்தப்பட்டு அவர் சித்திரவதை செய்யப்பட்டமையும் மற்றுமொரு பெண்ணுக்கு ஊசிகள் ஏற்றப்பட்டமையும் உலகளாவிய ரீதியில் கண்டனத்தை ஏற்படுத்தியிருந்தன. இருந்தபோதிலும் மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தமட்டில் வேலைவழங்குநர்கள் இதுகுறித்து சிந்திப்பதோ அன்றில் கவலைப்படுவதோ இல்லை என்ற நிலைமையே தொடர்ந்து வருகின்றது.
ஒருவகையில் “நீ கூறுவதைக்கூறு நான் செய்வதைச் செய்வேன்' என்ற போக்கையே மத்திய கிழக்கு நாட்டு வேலைவழங்குநர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு கிடைக்காமல்போவதுடன் வாழ்நாள் முழுவதும் நோயால் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப் படுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோரில் 90 வீதமானவர்கள் பலதரப்பட்ட உடல், உள ரீதியான கஷ்டங்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகுவதை காணமுடிகின்றது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களை அனுப்பி வைக்கும் முகவர் நிலையங்கள் சட்ட ரீதியானவையாக இல்லாதிருப்பதுடன் போலி வாக்குறுதிகளையும் வாவழங்கி வருகின்றனர். முகவர்களின் இத்தகைய பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்கள் ஏமாற்றத்தையே காண முடிகின்றது.
இதுகுறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏலவே எச்சரித்துள்ளபோதும் சட்ட விரோத வெளிநாட்டு முகவர் நிலையங்களின் செயற்பாடுகளோ அன்றேல் வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் பயணிகளின் தொகையோ குறைந்தபாடில்லை.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிப்பெண்களுக்கு உரிய பயிற்சியின்மையும் போதிய மொழியாற்றலின்மையும் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் மோசமாக நடத்தப்படுவதற்கும் நெருக்கடி களை எதிர்நோக்குவதற்கும் காரணமாக அமைகின்றது. வேலை வாய்ப்பு வழங்குநர்களும் இதுதொடர்பில் போதிய அறிவற்றவர்களாகவே இருப்பதுடன் பணிப்பெண்களே அனைத்துக் கடமைகளையும் புரிய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இவை தவறும் பட்சத்திலேயே அவர்களுக்கெதிரான சித்திரவதைகளும் துஷ்பிரயோகங்களும் ஆரம்பிக்கின்றன.
இவற்றைத் தவிர்க்கும் வகையில் குறைந்தபட்சம் இலங்கையிலிருந்தும் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும் அடிப்படை மொழியறிவைப் புகட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேவேளை குறித்த நாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதரகங்கள் அங்கு பணியாற்றும் இலங்கைப் பிரஜைகள் விடயத்தில் அக்கறையுடன் செயற்படவும் அவர்களது குறைநிறைகளை கேட்டறிந்து கொள்ள வும் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமே அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடியதாக இருக்கும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக